"இது ரெண்டுல 'ஒண்ணு' நடந்தா கூட... 'டெல்லி', 'பெங்களூர்' 'ஈஸி'யா 'பிளே' ஆஃப் போய்டலாம்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் மற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை கொல்கத்தா வீழ்த்தியிருந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி அவர்கள் தங்களது பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் குவித்துள்ளது. இலக்கை நோக்கி களமிறங்கி டெல்லி அணி ஆடி வரும் நிலையில், வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றில் மும்பை அணியை எதிர்கொள்ளும்.
மறுபுறம் தோல்வி பெறும் அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, டெல்லி இந்த போட்டியில் தோல்வியை தழுவினாலும் 134 ரன்களை அடிக்க வேண்டும். அதே வேளையில், பெங்களூர் அணி தோல்வி பெற்றால் டெல்லி அணி 17.3 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும். இது இரண்டில் ஒன்று நடந்தால், இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில், தோல்வி பெறும் அணி நாளைய போட்டியின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும்.
பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், கொல்கத்தா அணிக்கு அது நெருக்கடியாக அமையலாம். நாளை நடைபெறும் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி பெற்றால் மட்டும் தான் கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமையும். இல்லையெனில் கொல்கத்தா பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும்.
மற்ற செய்திகள்