தீவிர உடற்பயிற்சியில் ஜடேஜா.. வீடியோவின் பேக் கிரவுண்டில் கேட்ட தமிழ் பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பைத் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

தீவிர உடற்பயிற்சியில் ஜடேஜா.. வீடியோவின் பேக் கிரவுண்டில் கேட்ட தமிழ் பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்!!

தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22 ஆம் தேதியன்று தொடங்குகிறது.

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கும் ஏற்கனவே முன்னேறி இருந்தது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மோதி இருந்த இந்திய அணி, த்ரில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி மழை காரணமாகவும் கைவிடப்பட்டிருந்தது. மேலும், தங்களின் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியையும் இந்திய அணி வரும் அக்டோபர் 23 ஆம் தேதியன்று சந்திக்கவுள்ளது.

Ravindra jadeja shares work out video with tamil song

கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீக் சுற்றில் இந்திய அணி மோதி இருந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறவும் வழி செய்திருந்தது. இதனால், இந்த முறை நிச்சயம் இந்திய அணி திட்டம் வகுத்து களமிறங்கும் என்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர். அதே போல, இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.

அதே வேளையில், இந்திய அணிக்கு ஒரு சில சிக்கல்களும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக உருவாகி இருந்தது. கிரிக்கெட் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா, காயம் காரணமாக டி 20 உலக கோப்பைத் தொடரில் இருந்து விலகும் நிலை உருவானது. அவருக்கு பதிலாக, முகமது ஷமி மாற்று வீரராக அணியில் தேர்வாகி உள்ளார்.

Ravindra jadeja shares work out video with tamil song

பும்ராவுக்கு முன்பாக, சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக டி 20 உலக கோப்பைத் தொடருக்கு தேர்வாக முடியாமல் போனது. இதனால், தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் ஜடேஜா, அவ்வப்போது தான் சிகிச்சை மேற்கொண்டு வருவது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது ஜடேஜா பகிர்ந்துள்ள வீடியோவும், பின்னணியில் ஓடும் பாடலும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தான் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்த ஜடேஜா, பேக்கிரவுண்டில் தமிழ் பாடல் ஒன்றை இணைத்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான Ala Vaikunthapurramuloo தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பான 'வைகுண்டபுரம்' படத்தில், "சின்னவரு சிறப்பு தான், சீண்டி பாத்தா நெருப்பு தான்" என்ற தமிழ் பாடலை ஜடேஜா இணைத்துள்ளார்.

 

தான் சிறப்பாக தயாராகி வருவதை உணர்த்தும் வகையில் தமிழ் பாடலை ஜடேஜா குறிப்பிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் சிஎஸ்கேவுடன் ஒப்பிட்டும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

RAVINDRA JADEJA, TAMIL SONG, WORKOUT

மற்ற செய்திகள்