பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி அரை இறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின் வெளியேறி இருந்தது.

பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!!

Also Read | வங்க தேசத்துக்கு எதிரான தொடர்.. இந்திய கிரிக்கெட் அணியில் BCCI செய்த மாற்றம்.. முழுவிபரம்..!

உலக கோப்பைத் தொடர் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

இதில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், டி 20 அணிக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான டி 20 தொடர் சமீபத்தில் முடிவடைந்திருந்தது. ,முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது டி 20 போட்டி, DLS முறைப்படி டை ஆனதாக அறிவிக்கப்பட, டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது.

ravindra jadeja ruled out from odi series against bangladesh

இதற்கு அடுத்தபடியாக, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடர், நவம்பர் 25 ஆம் தேதியன்று தொடங்குகிறது. நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி வங்காளதேச அணிக்கு எதிரான தொடர்களில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26 வரை நடைபெற உள்ளது.

வங்காளதேச அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை கடந்த மாதமே பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், தற்போது வங்காளதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் முழங்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக வெளியேறி இருந்தார் ரவீந்திர ஜடேஜா. இதன் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜடேஜா, மெல்ல மெல்ல குணமடைந்து வந்தார். இதற்கு மத்தியில், டி 20 உலக கோப்பை தொடரில் ஜடேஜா இடம்பெறவில்லை. காயம் முழுமையாக குணமடையாததால் இதன் பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து தொடரிலும் ஜடேஜா இடம்பெறவில்லை.

ravindra jadeja ruled out from odi series against bangladesh

அடுத்தடுத்து பல தொடர்களில் தொடர்ந்து காயம் காரணமாக ஜடேஜா விலகி இருப்பதால், வங்காளதேச தொடரில் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த ஜடேஜா, தற்போது விலகி உள்ளார். காயம் குணமடைய இன்னும் சில காலம் தேவைப்படும் என ஜடேஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒரு நாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஷபாஸ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜாவை போல யாஷ் தயாளும் வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால் தற்போது காயம் காரணமாக அவரும் விலக குல்தீப் சென் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி : ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ராஜத் படிதர், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஷபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்

Also Read | Vijay : Fans Meet-க்கு வந்த காரில் கருப்பு நிற ஸ்டிக்கர்..! நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதமா? - முழு விபரம்.

CRICKET, RAVINDRA JADEJA, ODI SERIES, BANGLADESH

மற்ற செய்திகள்