'உங்கள பெரிய வீரன்னு நெனச்சேன்'... 'இப்படி ஒரே அடில பொசுக்குனு போய்ட்டிங்க'... வைரலாகும் மஞ்ரேக்கர் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு உலகக்கோப்பை போட்டியில் யார் வைரலானார்களோ இல்லையோ சஞ்சய் மஞ்ரேக்கரும் அவரது ட்விட்யும் வைரலானது. அவர் தோனியை சீண்டியது முதல் ஜடேஜாவை கிண்டல் செய்தது வரை பேசுபொருளாக மாறியது. ரசிகர்கள் பலரும் அவரது கருத்துக்கு கண்டங்கள் தெரிவித்ததுடன் அவரை ட்ரோல் செய்யவும் மறக்கவில்லை.

'உங்கள பெரிய வீரன்னு நெனச்சேன்'... 'இப்படி ஒரே அடில பொசுக்குனு போய்ட்டிங்க'... வைரலாகும் மஞ்ரேக்கர் வீடியோ!

இதனிடையே நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி, உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், அரையிறுதி போட்டியில் ஜடேஜா சிறப்பாக விளையாடியதாக மஞ்ரேக்கர் பாராட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டிக்கு பின்பு பேசிய அவர், ஜடேஜா தனது சிறப்பான பங்களிப்பை செய்திருப்பதாக மனம் திறந்து பாராட்டியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக ஜடேஜா ஒரு நாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என மஞ்ரேக்கர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு பதிலளித்த ஜடேஜா 'பிதற்றும் வார்த்தைளை பேச வேண்டாம்' எனக் கடுமையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.