கேப்டனை மாற்றிய CSK.. அன்றே கணித்த கவாஸ்கர்..ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா விளையாட இருக்கிறார். கேப்டன் பொறுப்பில் இருந்து தல தோனி விலகியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தி உள்ளது.
இந்த போன்ல 'Wedding Shoot'-ஆ.?.. குசும்புக்கும் ஒரு அளவில்லையா?.. வைரல் வீடியோ..!
தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே முதலில் ரசிகர்களுக்கு நியாபகம் வருவது மஹேந்திர சிங் தோனியின் முகம் தான். ஐபிஎல்-ன் முதல் தொடரில் இருந்து ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் மாறிக்கொண்டிருக்க, சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மட்டுமே இருந்து வந்தார். இடையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் காயம் காரணமாக தோனி விடுப்பில் செல்ல சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் 4 போட்டிகளில் ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். அதன்பிறகு தோனியே சென்னை அணியின் கேப்டனாக இருந்துவந்தார்.
கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பு குறித்து பேசி இருந்தார். அப்போது நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் தோனிக்கு ஓய்வு தேவைப்பட்டால் அந்த பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்படலாம் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்," தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி தனது பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிற்கு வழங்கினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால் சமீபகாலங்களில் ஜடேஜாவின் அபாரமான திறமை வெளிப்பட்டு வருகிறது. அவர் அணியை வழிநடத்த முழுத் தகுதியையும் பெற்றிருக்கிறார்"என்றார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிற்கு தோனி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனி தொடர்ந்து விளையாடுவாரா?
கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுவதாக அறிவிப்பு வெளி வந்ததிலிருந்து தோனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கும் பதில் அளித்திருக்கும் அந்த அணி நிர்வாகம், 'பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் பொறுப்பை தொடர்ந்து தோனி மேற்கொள்வார்' என தெரிவித்திருக்கிறது.
2008-ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி அந்த பொறுப்பிலிருந்து விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
320 அப்ளிகேஷன்களுக்கு ஆப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சொன்ன தகவல்..!
மற்ற செய்திகள்