மாட்டிக்கிட்டு முழிக்கும் இந்தியா டீம்.. ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்.. "அட, இது கூட நல்லா இருக்கே!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வரும் விஷயத்தை சரி செய்ய, தினேஷ் கார்த்திக் ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.
தென்னாப்பிரிக்க தொடரை முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் மோதவுள்ளது.
இந்தியாவில் வைத்து இரு தொடர்களும் நடைபெறவுள்ள நிலையில், முதல் ஒரு நாள் போட்டி, பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஆரம்பமாகிறது.
இளம் வீரர் தேர்வு
இதற்கான இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. பும்ரா மற்றும் ஷமி ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்கள் அதிகம் பேர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அது மட்டுமில்லாமல், இளம் வீரர் ரவி பிஷ்னோய், முதல் முறையாக இந்திய அணிக்காக ஆட தேர்வாகியுள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்டிங்
முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய 0 - 3 என இழந்தது, கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ராகுலின் முடிவுகள், மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை என பலவும் இந்திய அணிக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றுள் குறிப்பாக, இந்திய அணிக்கு மிகப் பெரிய தலைவலி என்றால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான்.
ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்
கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங், பெரிய அளவில் கை கொடுத்ததில்லை. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கூட, தவான் மற்றும் கோலி ஆகியோர், ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய போதும், மிடில் ஆர்டரில் ஒரு வீரர் கூட சிறப்பாக ஆடி ரன் குவிக்கவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையை சரி செய்வதற்கு, தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
ஜடேஜாவின் பலம்
'ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆறாவது இடத்தில் சிறப்பாக விளையாடுவார். அது மட்டுமில்லாமல், 5 ஆவது இடத்தில் கூட அவரை களமிறக்கலாம். அவர் தனது மூளையை பயன்படுத்தி ஆடுவதால், இனிமேல் அவர் பொறுப்பற்ற குழந்தை ஒன்றும் கிடையாது. ரன்களைக் குவிப்பது மட்டுமில்லாமல், கடைசி வரை நின்று ஜடேஜாவால் அணியை வெற்றி பெறவும் செய்ய முடியும். ஒயிட் பால் கிரிக்கெட்டில், தன்னுடைய பேட்டிங்கில் தான் அதிக பலத்துடன் உள்ளார்' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை.. ஒரே நாளில் கண்ட சரிவு.. நகை வாங்க போறவங்களுக்கு செம லக் தான் போங்க
காயத்தால் விலகல்
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் காயமடைந்த ஜடேஜா, அதன் பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் கலந்து கொள்ளவில்லை. அது மட்டுமில்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை.
காயத்தில் இருந்தும் ஜடேஜா முழுமையாக குணமடைய, இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்தால், நிச்சயம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் கை கொடுக்கும் என்பதால் பலரும் அதிக ஆவலுடன் உள்ளனர்.
மற்ற செய்திகள்