யாரையும் Follow பண்ணாத ஜடேஜா, இன்ஸ்டாவில் ஆஸ்திரேலிய வீரரை Follow பண்ண காரணம் என்ன??.. வைரலாகும் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் தொடரையும் தக்க வைத்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
முதல் போட்டியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக ஆடி இருந்தது. அதே வேளையில், இரண்டாவது போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்த போதும் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்திருந்தார் ரவீந்திர ஜடேஜா.
95 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்து 18 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. 113 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து, 115 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி இருந்த இந்திய அணி, 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
மொத்தம் 10 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஜடேஜா ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆட்ட நாயகன் வென்றிருந்த ஜடேஜா, சுமார் 5 மாத இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் ஆடி வரும் சூழலில், தொடர்ந்து பட்டையை கிளப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் யாரையுமே Follow செய்யாத ரவீந்திர ஜடேஜா, முதல் முறையாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை Follow செய்துள்ளார். இது பற்றி தனது ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஜடேஜா, "எனது நண்பர் நாதன் லயனை 24 மணி நேரம் பின்தொடர போகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
யாரையும் இன்ஸ்டாவில் பின் தொடராத ஜடேஜா, திடீரென நாதன் லயனை பின்தொடர்வது பற்றி சில காரணங்களும் வெளியாகி உள்ளது. டெஸ்ட் போட்டிக்கு நடுவே ஜடேஜா தன்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதில்லை என லயன் குறிப்பிட்டதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில், ஜடேஜா தற்போது 24 மணி நேரம் பின் தொடர்வதாக அறிவித்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | கே எல் ராகுல் பேருகிட்ட இருந்த ஒரு விஷயம் மிஸ்ஸிங்.. பிசிசிஐ அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள்?!
மற்ற செய்திகள்