மனைவியுடன் வெளியில் சென்ற இந்திய 'கிரிக்கெட்' வீரர்... முகக்கவசம் அணியாததால் பெண் போலீசுடன் ஏற்பட்ட 'வாக்குவாதம்'... சலசலப்பை ஏற்படுத்திய 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக பொது வெளியில் செல்லும் மக்கள் முகக்கவசங்களை அணிந்து செல்ல வேண்டும் என அரசு சார்பில் அறிவுத்தப்பட்டுள்ளனர்.

மனைவியுடன் வெளியில் சென்ற இந்திய 'கிரிக்கெட்' வீரர்... முகக்கவசம் அணியாததால் பெண் போலீசுடன் ஏற்பட்ட 'வாக்குவாதம்'... சலசலப்பை ஏற்படுத்திய 'சம்பவம்'!!!

மேலும், முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி மற்றும் வேறு சிலருடன் காரில் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது ரவீந்திர ஜடேஜா முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், அவரது மனைவி முகக்கவசம் அணியவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் பணியில் இருந்த பெண் போலீஸ், ரவீந்திர ஜடேஜாவிடம் லைசென்ஸ் கேட்ட நிலையில் தொடர்ந்து அவரது மனைவி முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதிக்கவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஜடேஜா அந்த பெண் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அந்த பெண் மிகவும் தவறான முறையில் பேசியதால் தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஜடேஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பலர் ஜடேஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேறு பலர் பொது மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் கூறிவளர்கின்றனர். இந்த நிகழ்வின் காரணமாக, மன அழுத்தம் கொண்ட அந்த பெண் போலீஸ், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, துணை கமிஷனர் மனோகர் சிங் கூறுகையில், 'இரு தரப்பிலும் இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. ஜடேஜா முகக்கவசம் அணியாத நிலையில், அவரது மனைவி முகக்கவசம் அணிந்துள்ளாரா என போலீசார் சோதனை செய்ய முற்பட்ட போது, ஜடேஜாவின் மனைவி தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முகக்கவசம் அணியாதது தொடர்பாக இன்னும் அபராத தொகை வசூலிக்கப்படாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பான முழுமையான நடைமுறை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்