RRR Others USA

எல்லா மேட்ச்லயும் சொதப்பும் வீரர்?.. அடுத்த மேட்ச்ல வாய்ப்பு இருக்கா??.. ஜடேஜா முக்கிய முடிவு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று (03.04.2021) நடைபெற்றிருந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

எல்லா மேட்ச்லயும் சொதப்பும் வீரர்?.. அடுத்த மேட்ச்ல வாய்ப்பு இருக்கா??.. ஜடேஜா முக்கிய முடிவு

15 ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக, புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், 210 ரன்கள் அடித்தும் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது.

மூன்று போட்டிகளிலும் தோல்வி

இதனைத் தொடர்ந்து, நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது சிஎஸ்கே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாற, 18 ஓவர்களிலேயே 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 15 ஆவது ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை அடைந்துள்ளது.

தொடர்ந்து ஏமாற்றும் ருத்துராஜ்

நடப்பு சாம்பியனான சென்னை அணி, அடுத்தடுத்து தோல்விகளை சந்திப்பது, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக, இளம் வீரர் ஒருவரின் ஃபார்மும் பெரிய அளவில் கேள்வியை உருவாக்கி உள்ளது. கடந்த முறை ஆரஞ்ச் கேப் வென்ற ருத்துராஜ், இந்த தொடரில் முறையே 0, 1 மற்றும் 1 ரன்களை எடுத்துள்ளார்.

ravindra jadeja backs ruturaj after defeat against punjab kings

இனியும் வாய்ப்பு கிடைக்குமா?

முந்தைய ஐபிஎல் சீசன்களிலும் இது போன்று ஆரம்ப போட்டிகளில் அவர் சுமாராக ஆடினாலும், அதன் பிறகான போட்டிகளில் அவர் தன்னுடைய ஃபார்மினை நிரூபித்தார். ஆனால், எல்லா முறையும் அப்படி நிகழுமா என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். மேலும், அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கான வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜடேஜா சொன்ன விஷயம்

இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா, "பவர்பிளே ஓவர்களில், அதிக விக்கெட்டுகளை நாங்கள் இழந்தோம். மேலும், நாங்கள் பலமாக திரும்பி வர வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதே போல ருத்துராஜ் விஷயத்தில், அவருக்கு நாங்கள் அதிகம் தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மேலும், அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அவர் ஒரு சிறந்த வீரர் என்பது அனைவருக்குமே தெரியும். நிச்சயம் அவர் பழைய ஃபார்முக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்களும் கடினமாக உழைத்து, மீண்டு வருவோம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ravindra jadeja backs ruturaj after defeat against punjab kings

இனிவரும் போட்டிகளிலும் ருத்துராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், பழையபடி ஆடி, சிஎஸ்கேவுக்கு அவர் வெற்றியைத் தேடிக் கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CHENNAI-SUPER-KINGS, RAVINDRA JADEJA, RUTURAJ GAIKWAD, IPL 2022, CSK VS PBKS, CSK

மற்ற செய்திகள்