வம்புக்கு வந்த ட்விட்டர்வாசியை பங்கமாக செஞ்சு விட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்.. "மனுஷன் சேட்ட புடிச்ச ஆளுங்க 😅"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையே நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி, 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது.
Also Read | சுற்றுலா போன காதலனுக்காக தேர்வு எழுத போன பெண்.. உண்மை தெரிய வந்ததும் நேர்ந்த பரிதாபம்!!
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கடும் நெருக்கடி உருவாகி இருந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 227 ரன்களும், இந்திய அணி 314 ரன்களும் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 231 ரன்கள் எடுத்திருந்தது.
145 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி இருந்த சூழலில், எளிதில் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால், வங்காளதேச அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. 74 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற, அப்போது கைகோர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றவும் உதவி செய்தனர்.
ஆறு விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்த அஸ்வின் ஆட்ட நாயகன் விருதும் வென்றிருந்தார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வரும் அஸ்வினை கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர், டெஸ்ட் கிரிக்கெட் கண்ட சிறந்த இந்திய வீரர்களில் ஒருவர் என்றும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், பல மகத்தான சாதனைகளையும் டெஸ்ட் போட்டிகளில் அவர் படைத்துள்ளார்.
ஆட்டநாயகன் விருதுடன் இருக்கும் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சிறப்பான போட்டி மற்றும் மறக்க முடியாத வெற்றி என அதில் அஸ்வின் குறிப்பிட்டிருந்தார். அப்போது இதனை பகிர்ந்த இலங்கையை சேர்ந்த ட்விட்டர்வாசி ஒருவர், "நீங்கள் அந்த ஆட்டநாயகன் விருதை மொமினுல் ஹக்கிடம் தான் கொடுத்திருக்க வேண்டும் அவர் தான் உங்களுடைய விக்கெட்டை காப்பாற்றி விட்டார். இல்லை என்றால் இந்தியா 89 ரன்களில் ஆல் அவுட்டாகி இருக்கும்" என பதிவிட்டிருந்தார்.
அஸ்வின் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்ற சூழலில், ஷார்ட் லெக் திசையில் அவர் கொடுத்த கேட்ச் ஒன்றை வங்காளதேச வீரர் மொமினுல் ஹக் போட்டிக்கு நடுவே தவற விட்டிருந்தார். அதன் பின்னர் கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற அஸ்வின் அணியை வெற்றி பெறவும் செய்திருந்தார். இதனைத் தான் அந்த ட்விட்டர்வாசி அப்படி குறிப்பிட்டிருந்தார்.
இதனை கவனித்து பதில் ட்வீட் செய்த அஸ்வின், "அடடா நான் உங்களை பிளாக் செய்து விட்டதாக நினைத்தேன். மன்னிக்கவும் அது நீங்கள் இல்லை போல. அவர் பெயர் டேனியல் அலெக்சாண்டர். அதுதான் அவர் பெயர். இந்தியா கிரிக்கெட் விளையாடாவிட்டால் நீங்கள் இருவரும் என்ன செய்வீர்கள் என கற்பனை செய்து பாருங்கள்" என பதிவிட்டு அதிரடியான பதிலடி ஒன்றையும் அஸ்வின் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
Also Read | ஐபிஎல் 2023 : CSK கேப்டன் தோனியா? ஸ்டோக்ஸ்-ஆ?.. கிறிஸ் கெயில் சொன்ன அசத்தலான பதில்!!
மற்ற செய்திகள்