"இனி நம்ம வீட்டுல கல் எல்லாம் அடிக்கமாட்டாங்க".. வைடு பால் போட்டதும் அஸ்வின் மனசில் ஓடியது இது தான்.. சுவாரஸ்ய தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது இந்திய அணி.

"இனி நம்ம வீட்டுல கல் எல்லாம் அடிக்கமாட்டாங்க".. வைடு பால் போட்டதும் அஸ்வின் மனசில் ஓடியது இது தான்.. சுவாரஸ்ய தகவல்!

Also Read | கவாஸ்கர், ரவி சாஸ்திரி பலரும் இங்க சாப்ட்டு தான் மேட்ச் ஆட போவாங்களாம்.. வைரலாகும் ஆஸ்திரேலிய தமிழ் 'தம்பதி'!!

160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. ஆனால், கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். இக்கட்டான சூழலில் சிக்ஸர்களை கோலி பறக்க விட, கடைசி பந்தல் அஸ்வின் உதவியுடன் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளில் ஒன்று என்றும் இதனை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், கோலி ஃபார்மையும் பலர் கொண்டாடி வருகின்றனர்.

ravichandran ashwin reaction after wide ball from nawaz

இந்த நிலையில், கடைசி தருணத்தில் நடந்தது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அஸ்வின் தான் வைடு பாலை விட்டது பற்றியும் பேசி இருந்தார். "நான் சந்தித்த முதல் பந்தை வைடாக வீசியதும் நமக்கும் அந்த பந்துக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல நின்று கொண்டேன். அந்த ஒரு ரன் கிடைத்ததும் மனதில் அப்படி ஒரு குதூகலம். இனிமேல் நமது வீட்டில் கல் எல்லாம் அடிக்கமாட்டார்கள். அடுத்த பந்தை சரியாக அடித்து விட்டால் போதும் என்று இருந்தது.

ravichandran ashwin reaction after wide ball from nawaz

ஹாரிஸ் ராஃப் ஓவரில் கோலியை சிக்ஸர்கள் அடிக்க வைத்த கடவுள், நாம் அடிக்கும் பந்தை ஃபீல்டர் மீது விட மாட்டாரா என்று நினைத்த அடித்தது தான் அது" என தெரிவித்துள்ளார்.

இது தவிர, தினேஷ் கார்த்திக் குறித்தும், களத்தில் தான் பேட்டிங் செய்ய வந்த போது கோலி தன்னிடம் பேசியது குறித்தும் பல்வேறு விஷயங்களை அஸ்வின் தனது புதிய வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

Also Read | தமிழில் பேசிய ஹர்திக் பாண்டியா.. "அட, என்ன சொல்றாரு பாருங்க".. பட்டையை கிளப்பும் வீடியோ!!

CRICKET, RAVICHANDRAN ASHWIN, MOHAMMAD NAWAZ, T20 WORLD CUP 2022

மற்ற செய்திகள்