கும்ப்ளேவின் 18 வருஷ ரெக்கார்டு Break.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைச்ச வேறலெவல் சாதனை!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நிச்சயம் முழுக்க முழுக்க விறுவிறுப்பு நிறைந்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கும்ப்ளேவின் 18 வருஷ ரெக்கார்டு Break.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைச்ச வேறலெவல் சாதனை!!

                                  Images are subject to © copyright to their respective owners

அப்படி இருக்கையில் நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர், சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆனால் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சில் அவர்கள் இருவரும் அவுட் ஆக ஆஸ்திரேலிய அணியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

64 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரவிந்திர ஜடேஜா தனது கம்பேக்கிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல்  நாளில் ஆடிய இந்திய அணி, 24 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அசாத்திய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில், தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகள் என வந்து விட்டால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக் கூடிய அஸ்வின், டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஏராளமான சாதனைகளையும் படைத்துள்ளார்.

Ravichandran ashwin reach 450 wickets in test create record

Images are subject to © copyright to their respective owners

டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன்பு அணில் கும்ப்ளே இந்த சாதனையுடன் விளங்கி இருந்தார். அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் எடுத்திருந்த சூழலில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 89 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச அளவில், அதிவேகமாக 450 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமை, இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (80 டெஸ்ட் போட்டிகள்) கையில் உள்ளது.

Ravichandran ashwin reach 450 wickets in test create record

Images are subject to © copyright to their respective owners

இதேபோல, 3000 ரன்கள் அடித்து 450 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் அஸ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் ஷேன் வார்னே, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு அடுத்து இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் அஸ்வின் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

RAVICHANDRAN ASHWIN, IND VS AUS

மற்ற செய்திகள்