Karnan usa

‘இந்த தடவை கப் வின் பண்ண அவங்களுக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு’!.. ‘சும்மா சொல்லல, செம ஸ்ட்ராங்கா இருக்காங்க’.. அஸ்வின் கணித்த அணி எது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த வருட ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

‘இந்த தடவை கப் வின் பண்ண அவங்களுக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு’!.. ‘சும்மா சொல்லல, செம ஸ்ட்ராங்கா இருக்காங்க’.. அஸ்வின் கணித்த அணி எது..?

14-வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் இன்று (09.04.2021) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன.

Ravichandran Ashwin names the team to beat in IPL 2021

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பாக விளையாடும் சுழற்பந்து வீச்சாளரன அஸ்வின் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், ‘டெல்லி கேப்பிடல்ஸ் அணி இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குவதால் ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி வலுவானதாக உள்ளது. கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக அது உள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்த முடியாத அணி ஒன்றும் இல்லை. ஒவ்வொரு அணியும் வலுவாகத்தான் இருக்கிறது. நான் சாதுர்யமாகப் பேசவில்லை. மும்பை அணி உண்மையில் வலிமையான அணிதான், அதிகமான அனுபவ வீரர்களைக் கொண்டிருக்கிறது.

Ravichandran Ashwin names the team to beat in IPL 2021

மும்பை அணி தங்களது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவான வீரர்கள் இருக்கின்றனர். அதிலும் கேப்டன் ரிஷப் பந்த் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார் என்பதால், கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது.

Ravichandran Ashwin names the team to beat in IPL 2021

கடந்த ஆண்டு பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை. அதற்கு லாக்டவுன், பயோபபுள் சூழல் காரணம் என்பதை புரிந்துகொண்டோம். ஆனால், இந்த ஆண்டு ரிஷப் பந்த் சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். பேட்டிங்கிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளை பின்னோக்கிப் பார்த்தால் டெல்லி அணி சிறப்பாக விளையாடி முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்