"'டி 20' மேட்சோட 'சொத்து' யா அவரு... அவர போய் 'மிஸ்' பண்ணிட்டீங்களே..." வருத்தப்பட்ட முன்னாள் 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

"'டி 20' மேட்சோட 'சொத்து' யா அவரு... அவர போய் 'மிஸ்' பண்ணிட்டீங்களே..." வருத்தப்பட்ட முன்னாள் 'வீரர்'!!!

இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றுள்ள நிலையில், அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் 3 ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக 3 டி 20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடர்களுக்காக இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைத்தது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக முதல் முறையாக களமிறங்கிய அஸ்வின், 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஒரு ஓவரில் சராசரியாக 7.66 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான முகமது கைஃப், அஸ்வின் டி 20 போட்டிக்கான அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

விராட், ரோஹித், பொல்லார்டு, கெயில், வார்னர், டி காக், கருண், பட்லர், ஸ்மித், படிக்கல், பூரன் ஆகியோரின் விக்கெட்டுகளை பவர் பிளேயில் அஸ்வின் கைப்பற்றியதை சுட்டிக் காட்டிய கைஃப், தற்போதும் அஸ்வின் டி 20 தொடரின் மதிப்புமிக்க சொத்து தான் என குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு குறைந்த ஓவர் போட்டிகளில் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்