4 வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த கோலி.. "அந்த மேட்ச் முன்னாடி அவருகிட்ட அஸ்வின் சொன்ன விஷயம்".. வைரல் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்று வந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது. அதே போல, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இன்னொரு பக்கம், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு வரை பேட்டிங்கில் அதிக விமர்சனத்தை சந்தித்த கோலி, டி 20, ஒரு நாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.
ஆனால், டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் ரன் அடிக்காமல் இருந்து வந்த கோலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் கூட நிறைய ரன்களை குவிக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில் நிலைத்து நின்று ஆடிய கோலி, 186 ரன்கள் அடித்து சுமார் 1205 நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். இதனால் தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறந்த ஃபார்மில் இருக்கும் விராட் கோலி அடுத்தடுத்த தொடர்களிலும் சிறப்பாக ஆடுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில், கோலி சதம் அடித்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் அவரிடம் தான் பேசிய விஷயங்கள் குறித்து அஸ்வின் தற்போது சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"விராட் கோலி இந்த தொடரில் சிறப்பாக ஆடியதாகவே நான் உணர்ந்தேன். களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று அவர் விளையாடிய போதிலும் 30 - 40 ரன்கள் என நல்ல தொடக்கம் கிடைத்த பிறகும், துரதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டானார். அப்போது அவரிடம் நான் பேச வேண்டும் என்று நினைத்தேன் பொதுவாக நான் விராட் கோலியிடம் இப்படி பேசிக் கொண்டதே இல்லை.
Images are subject to © copyright to their respective owners.
ஆனால் இந்த நேரத்தில் பேசிக்கொள்ள வேண்டும் என தோன்றியது. ஒரு வீரர் நன்றாக விளையாடியும் தோற்றுப் போகிறார் என்றால் அவரது தோளில் கை வைத்து நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று கூற வேண்டும். இந்த அணுகுமுறை என் வாழ்க்கையில் எனக்கே என்னை சில நேரங்களில் புரிய வைத்தது. அதனால் விராட் கோலியிடம் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். கூடுதலாக இன்னும் களத்தில் இருக்க பாருங்கள். நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள் என கூறினேன்.
இந்திய அணியை பொறுத்தவரையில் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடுவது முக்கியமான ஒன்றாகும். அவர்கள் இருவருமே இந்தியாவுக்கு கிடைத்த பிளஸ் பாயிண்ட்கள். இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கோலி மற்றும் புஜாராவின் பேட்டில் இருந்து ரன்கள் வரவேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடுவதை அமர்ந்து பார்க்க நான் எதையுமே செய்வேன்" என அஸ்வின் கூறி உள்ளார்.
மற்ற செய்திகள்