"இந்தியா அந்த மேட்ச்ல தோற்க என் வீடியோ தான் காரணமா?".. கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்.. அஸ்வின் கொடுத்த பதிலடி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்ததையடுத்து இரு அணிகளும் அடுத்ததாக ஒரு நாள் போட்டித் தொடரில் மோத உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "கனவுல வந்து கழுத்துல மாலை போட்டாரு".. பேமிலி ஆதரவுடன் கிருஷ்ணரை மணந்த இளம்பெண்!!..
முன்னதாக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றிருந்தது. இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற சூழலில் நான்காவது போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் வரை முதல் இன்னிங்ஸ் நடந்த சூழலில், கடைசி நாள் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி இருந்ததையடுத்து போட்டியும் டிராவாக முடிந்திருந்தது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது. இதனால் மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் என இந்திய அணி ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக ஆடி ரன் சேர்த்த ஆஸ்திரேலியா அணி மிக எளிதில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில் அந்த சமயத்தில் நடந்த சம்பவம் குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு அஸ்வின் வெளியிட்டிருந்த வீடியோவில் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதை பார்த்து தான் ஆஸ்திரேலிய அணி வென்றதாக ரசிகர்கள் அஸ்வினை கலாய்த்திருந்தனர்.
தன் மீதான விமர்சனம் குறித்து தற்போது பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், "டெல்லியில் நடைபெற்ற போட்டிக்கு பின்னர் நான் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தேன். அதில் என்னுடைய அட்மின் இந்தியாவில் சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்ற தலைப்புடன் பதிவிட்டு இருந்தார். அதைப் பார்த்து எனக்கே நான் எப்படி அதை கற்றுக் கொடுக்க முடியும் என்று தோன்றியது. ஆனாலும் அந்த வீடியோவில் உங்களுடைய தடுப்பாட்டத்தை நம்பி செயல்பாடுகளை பின்பற்றுங்கள் என்பது போன்ற சில முக்கிய புள்ளிகளை நான் தெரிவித்திருந்தேன் அதெல்லாம் கிரிக்கெட்டின் வெறும் அடிப்படையாகும்.
Images are subject to © copyright to their respective owners.
ஆனால் இந்தியாவில் நாங்கள் தோற்றதும், நான் பகிர்ந்த வீடியோ தான் காரணம் என்று பலர் கமெண்ட் போட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது. இங்கே ராகுல் டிராவிட் எங்களுக்கு பயிற்சியாளராக இருப்பது போல், ஆஸ்திரேலியா அணிக்கு ஆண்ட்ரூ மெக்டொனால்ட் இருக்கிறார். ஆனால் நான் போட்ட வீடியோவை பார்த்து ஆஸ்திரேலியா ஆடியதாக கூறியது எனக்கு வேடிக்கையாகவும், பெருமையாகவும் இருந்தது.
ரசிகர்களின் கருத்துக்களால், அடுத்த நாளே அட்மின் அந்த பேட்டியின் தலைப்பை மாற்றினார். 'நீங்கள் தலைப்பை மாற்றிவிட்டீர்கள், ஆனால் நம்முடைய தமிழ் வீடியோவில் இருக்கும் சப்டைட்டில் பார்த்து சுழற்பந்து வீச்சை கற்றிருப்பார்கள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டேன். அப்படி அந்த வீடியோவை பார்த்து வென்றிருந்தால் நம்முடைய சேனல் வளர்ந்திருக்க வேண்டும் அல்லவா?. நம்முடைய வீடியோவை வைத்து ஜெயிக்க முடியும் என்றால் எந்த அணிக்கும் பயிற்சியாளர் தேவையில்லை என நான் நினைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்