RRR Others USA

“அது முட்டாள்தனமான ரூல்ஸ்...” பிசிசிஐ கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முட்டாள்தனமான விதிகளால் சில ஆண்டுகள் வர்ணனை செய்ய முடியாமல் போனதாக பிசிசிஐ-யை ரவி சாஸ்திரி சாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

“அது முட்டாள்தனமான ரூல்ஸ்...” பிசிசிஐ கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி.. என்ன காரணம்..?

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறை மும்பை, புனே, அகமதாபாத் என மூன்று நகரங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதனிடையே ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இந்த ஆண்டுக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பெயர் நீண்ட நாட்களுக்கு பிறகு இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ‘இது 15-வது சீசன் ஐபிஎல். நான் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்து 11 சீசன்களில் தொடர்ச்சியாக நான் வர்ணனையை செய்துள்ளேன். ஆனால் ஒரு சில முட்டாள்தனமான விதிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வர்ணனை செய்ய முடியவில்லை’ என பிசிசிஐ-யை கடுமையாக சாடினார்.

Ravi Shastri slams BCCI constitution for stupid clause

அதில், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒரு பணியில் இருக்கும் நபர் வேறு ஒரு பணியில் ஈடுபட முடியாது என்ற விதிமுறை உள்ளது. இதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி லோதா கமிட்டி அடங்கிய குழு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

BCCI, IPL, RAVI SHASTRI

மற்ற செய்திகள்