"உங்களுக்கு எல்லாம் என்னதாங்க பிரச்சனை?".. ஜடேஜா விஷயத்தில் எழுந்த விமர்சனம்.. மொத்த பேர் வாயையும் மூடிய ரவி சாஸ்திரி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களை கைப்பற்றி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

"உங்களுக்கு எல்லாம் என்னதாங்க பிரச்சனை?".. ஜடேஜா விஷயத்தில் எழுந்த விமர்சனம்.. மொத்த பேர் வாயையும் மூடிய ரவி சாஸ்திரி!!

                     Images are subject to © copyright to their respective owners

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி உள்ளது. முதல் போட்டியின் இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 3 ஆம் நாள் போட்டியும் தற்போது ஆரம்பமாகி உள்ளது.

கேப்டன் ரோஹித் ஷர்மா 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அக்சர் படேல் 52 ரன்களுடனும், ஜடேஜா 66 ரன்களுடனும் இரண்டாவது நாள் முடிவில் களத்தில் இருந்தனர். இதனிடையே, இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக பரபரப்பு கருத்து ஒன்று இணையத்தில் வலம் வந்தது.

Ravi Shastri reply to controversy on jadeja ointment in 1st test

Images are subject to © copyright to their respective owners

முகமது சிராஜ் கையில் இருந்து எதையோ எடுத்துக் கொண்ட ஜடேஜா, அதனை தனது விரல்களில் பூசிக் கொண்டதாக வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இதனால் ஜடேஜா பந்தை சேதப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக அதிர்ச்சி கருத்துக்களும் இணையத்தில் நிலவி வந்தது. ஆஸ்திரேலிய ஊடகங்கள், மைக்கேல் வாகன், டிம் பெயின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் கூட இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த சூழலில், தற்போது இந்திய அணி தரப்பில் சில காரணங்களை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தனது விரலில் ஏதோ பெயின் ரிலீஃப் கிரீம் ஒன்றைத்தான் ஜடேஜா கையில் தேய்த்ததை விளக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில், உண்மை பற்றி தெரிவதற்கு முன்னர், ஜடேஜா செயலுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில பதிலடி கருத்துக்களை கொடுத்துள்ளார்.

Ravi Shastri reply to controversy on jadeja ointment in 1st test

Images are subject to © copyright to their respective owners

"இது பற்றி பெரிதாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் என்னிடம் இரண்டு கேள்விகள் உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?. இல்லை. போட்டியின் நடுவர் இந்த விவகாரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?. அதுவும் இல்லை. இது பற்றி எதுவுமே நடக்காத போது எதற்காக இதுகுறித்து விவாதம் நடத்துகிறீர்கள். அது வெறும் ஆயின்மென்ட் தான். வலிகளை போக்கும் ஒரு நிவாரணி தான் அது. போட்டி நடுவர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத போது, இதை ஏன் சர்ச்சையாக்குகின்றனர். நாக்பூர் களத்தில் பந்து ஸ்பின் ஆவதற்கு எதையுமே செய்யத் தேவையில்லை" என ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

RAVINDRA JADEJA, RAVI SHASTRI, IND VS AUS

மற்ற செய்திகள்