‘எப்பவேனாலும் கூப்பிடுவோம் ரெடியா இரு’.. குஷியான சிஎஸ்கே வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணியின் இளம்பந்துவீச்சாளர் தீபக் ஷகருக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘எப்பவேனாலும் கூப்பிடுவோம் ரெடியா இரு’.. குஷியான சிஎஸ்கே வீரர்!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை டிரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முன்னதாக நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.

இதில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக விளையாட இளம் வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அழைக்கப்பட்டுள்ளார். இதில் ரிஷப் பண்ட் 4 -வது ஆர்டரிலும், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டகாரராகவும் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பை பயிற்சியில் ஈடுபடும் வீரர்களுக்கு பந்துவீசுவதற்காக இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் ஷகர் இங்கிலாந்து சென்றார். இதனை அடுத்து தனது பொறுப்பு முடிந்து இந்தியா திரும்பியுள்ள ஷகர் பயிற்சியில் பந்துவீசியது குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,‘என்னை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பந்து வீசும்படி தெரிவித்தனர். பின்னர் பயிற்சி முடிந்ததும் உலகக்கோப்பையில் விளையாட என்னை தயராக இருக்கும்படி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் அழைக்கப்படலாம் என கூறினார்’ என தீபக் ஷகர் தெரிவித்துள்ளார்.

ICCWORLDCUP2019, BCCI, CSK, DEEPAKCHAHAR