"தோனி கிட்ட இந்த பழக்கமே கிடையாது.." அவரு ரொம்ப சிம்பிள்.. முதல் முறையாக மனம் திறந்த ரவி சாஸ்திரி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் இல்லாத பழக்கம் ஒன்றை குறித்து, ரவி சாஸ்திரி முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி, கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
இவர் பயிற்சியாளாராக இருந்த சமயத்தில், இந்திய கிரிக்கெட் அணி பல சிறப்பான வெற்றிகளையும், சாதனைகளையும் புரிந்துள்ளது.
தோனிக்கு பாராட்டு
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது பேசியுள்ள ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை பாராட்டி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அலட்டிக் கொள்ள மாட்டார்
தோனி ஆடிய சமயத்தில், இந்திய அணியின் செயலாளராகவும், பயிற்சியாளராகவும் ரவி சாஸ்திரி பணிபுரிந்துள்ளார். இதனால், தோனியை பற்றி நன்கு அறிந்த அவர் பேசுகையில், 'தோனி ரன் எடுக்காமல் அவுட்டானாலும், செஞ்சுரி அடித்தாலும், அல்லது உலக கோப்பையை ஜெயித்தாலும், முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினாலும் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ள மாட்டார். நான் எத்தனையோ கிரிக்கெட் வீரர்களை பார்த்துள்ளேன். ஆனால், தோனியைப் போல ஒரு வீரரை பார்த்ததில்லை.
தோனியிடம் உள்ள பழக்கம்
சச்சின் டெண்டுல்கரும் இதே மாதிரி தான். ஆட்டத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆனால், அவர் கூட சில நேரத்தில் கோபப்படுவார். அந்த உணர்வு கூட தோனியிடம் கிடையாது. அதே போல, தோனிக்கு ஒரு பழக்கம் உள்ளது. தான் செல்லும் இடங்களில், செல்போனை எடுத்துச் செல்லமாட்டார்.
நானும் அவரிடம் மொபைல் எண்ணைக் கேட்டதில்லை. அவருக்கு மொபைல் போனைக் கொண்டு செல்வது பிடிக்காது என்பது எனக்கு தெரியும். இதுவரை ஒரு முறை கூட அவரிடம் மொபைல் போனில் பேசியதில்லை.
அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றால், அது எப்படி என்பது அவருடன் பழகும் போது உங்களுக்கே தெரிய வரும். தோனி அப்படிப்பட்ட ஒரு மனிதர்' என ரவி சாஸ்திரி புகழ்ந்தார்.
'பீஸ்ட்' கோலி
தொடர்ந்து, விராட் கோலி பற்றி பேசிய ரவி சாஸ்திரி, 'விராட் களத்தில் இருக்கும் போது ஒரு பீஸ்ட் போல இருப்பார். போட்டி என்று வந்து விட்டால் எதை பற்றியும் சிந்திக்க மாட்டார். ஆனால், களத்திற்கு வெளியே விராட் கோலி அப்படியே எதிர் குணம். மிகவும் அமைதியாகவும், கலகல என்று இருக்கக் கூடியவர்' என ரவி சாஸ்திரி தெரித்துள்ளார்.
மற்ற செய்திகள்