'நான் செஞ்ச தப்ப நீங்களும் பண்ணிடாதீங்க...' 'அதனால தான் என்னோட கேரியரே முடிஞ்சு போச்சு...' - ரோஹித்துக்கு முன்னாள் வீரர் அறிவுரை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மாவின் பெயர் டிசம்பரில் நடக்கவிருக்கும் ஒருநாள் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. மேலும் ரோஹித் சர்மாவின் காயம் காரணமாக தான் அவரின் பெயர் இடம்பெறவில்லையா, இல்லை அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு வேறு காரணம் இருக்குமா என்ற கேள்விகள், சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணி அறிவிப்பிற்கு பின் ரோஹித் சர்மா வலை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் வெளிவந்து வைரலானது.
இதன் காரணமாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தான் செய்த அதே தவறை ரோஹித்த்தும் செய்வதாக அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது, 'என் கிரிக்கெட் வாழ்க்கை 1991-ல் முடிவடைந்தது. ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஓய்வு தேவைப்படும் சமயத்தில் நாம் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால் நமக்கு காயத்தின் போது ஏற்படும் உணர்வை விட மோசமாக ஒரு உணர்வு இருந்து விட முடியாது. அறையில் முடங்கி இருப்பதை சில வீரர்கள் விரும்புவது இல்லை. அறையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று பலருக்கு தோன்றும்.
மீண்டும் நாம் முந்தைய உற்சாகத்திற்கு வர உழைப்போம். ஆனால் பல நேரங்களில் அது நமக்கு பலத்த அடியாக கூட மாறும். பல வீரர்கள் தங்கள் உடல் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்க விரும்புவார்கள். உங்கள் உடல் சரியாக இருக்கிறதா என்று உங்களுக்குத்தான் தெரியும்.
இதேபோல் நிலையில் நான் செய்த ஒரு தவறு தான் என் கிரிக்கெட் வாழக்கையை முற்றுப்பெற செய்தது. 1991-ல் நான் ஆஸ்திரேலிய தொடரில் கடைசியாக ஆடி இருக்க கூடாது, ஆனால் ஆடினேன். மருத்துவர்கள் அறிவுரையை மீறி, காயத்தின் வலியோடு ஆடினேன் அதுவே என் கடைசி மைதானம், அதன்பின் என்னால் கிரிக்கெட் தொடர்களில் ஆடவே முடியவில்லை.
அப்போது மருத்துவர்கள் கூறியது போல 3-4 மாதங்கள் அப்போது முறையாக ஓய்வு எடுத்து இருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்குக்கும். கூடுதலாக 4-5 வருடங்கள் நான் ஆடி இருப்பேன். காயத்தை நான் மதிக்கவில்லை. அதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தது.. அதே விஷயம் வேறு யாருக்கும் நடக்க கூடாது' என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி ரோஹித் சர்மாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்