"அவரு இவ்ளோ சந்தோஷமா இருக்குறத பாத்து 10 வருஷம் ஆயிடுச்சு..." நெகிழ்ச்சியுடன் 'இந்திய' கிரிக்கெட் வீரரின் 'மனைவி' போட்ட 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை சொந்தமாக்கியுள்ளது.
கோலி, ரோஹித் ஷர்மா, ஷமி போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத போதும் ரஹானே தலைமையிலான இந்திய அணி, மிகவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அவர்களின் இடத்திலேயே வைத்து வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித், வேடு, டிம் பெயின் ஆகிய முக்கிய விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தை 1 ரன்னில் அவுட் செய்திருந்த நிலையில், இந்த போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்மித்தை வெளியேற்றினார்.
When your backs are up against the wall, lean back and enjoy the support of the wall!! Well done to the entire team and what a win that was💯🔥🔥🔥🥳🥳.
Special mention to Mohd Siraj and @RealShubmanGill 👏👏..@ajinkyarahane88 @cheteshwar1 @Jaspritbumrah93 @y_umesh @imjadeja pic.twitter.com/4t8IlxZFlW
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 29, 2020
இந்நிலையில், போட்டிக்கு பின்னர் அஸ்வின் தனது அணி வீரர்கள் சிறப்பாக பங்காற்றியதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் புஜாரா, ரஹானே, உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அஸ்வினின் பதிவை குறிப்பிட்டு அவரது மனைவி ப்ரித்வி அஸ்வின், 'ஒவ்வொரு டெஸ்ட் போட்டி முடிந்த பின்னரும் நான் அஸ்வினுடன் பேசவும், அவரை நேரில் பார்க்கவும் செய்திருக்கிறேன். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கண்களில் இத்தனை புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அவர் இருந்து நான் பார்த்ததில்லை' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
I have seen/ spoken to Ashwin after every Test he has played and after a lot of wins. But I have never seen him this happy, satisfied and light (can I say?) with a smile in his eyes in almost 10 years. https://t.co/8f0qUW489S
— Prithi Ashwin (@prithinarayanan) December 29, 2020
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள இந்த வெற்றி என்பது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு அஸ்வினின் இந்த மகிழ்ச்சியே உதாரணமாக இருக்கும் என தெரிகிறது.
மற்ற செய்திகள்