"மாமா ஒண்ணும் பயப்படாத மாமா..." களத்தின் நடுவே கேட்ட 'தமிழ்' சத்தம்... 'ஆஸ்திரேலியா'வின் கனவை சுக்கு நூறாக்கிய 'அஸ்வின்'... சிறப்பான 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய  அணி அபாரமாக ஆடி, போட்டியை டிரா செய்தது.

"மாமா ஒண்ணும் பயப்படாத மாமா..." களத்தின் நடுவே கேட்ட 'தமிழ்' சத்தம்... 'ஆஸ்திரேலியா'வின் கனவை சுக்கு நூறாக்கிய 'அஸ்வின்'... சிறப்பான 'சம்பவம்'!!!

முன்னதாக, கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 309 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்த நிலையில், ரஹானே அவுட்டானார். அதன் பிறகு, கைகோர்த்த புஜாரா - ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

இதன் பிறகு பண்ட் மற்றும் புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணிக்கு கடைசி 5 விக்கெட்டுகள் இருந்தது. அப்போது களத்தில் இருந்த ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டனர். விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும், அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று போராடி, போட்டியை டிரா செய்து அசத்தினர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் உள்ளிட்ட பல வழிகள் மூலம் இந்திய அணியை வீழ்த்த பல சதிகளை ஆஸ்திரேலிய அணி முயற்சித்ததற்கு எந்தவித பலனும் இல்லாமல் போனது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கனவை அஸ்வின் - விஹாரி ஆகியோர் கலைத்து விட்டனர். கடைசி நேரத்தில் இருவரும் காயங்களுடன் போராடிய நிலையில், விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசிய வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அஸ்வின் விஹாரியிடம், 'இப்டியே ஆடுனா போதும். ஆளுக்கு பத்து பத்து பால் ஆடுனா போதும், கொஞ்ச பால் தான் இருக்கு... அவங்க போடுற பால் எதுவும் உள்ள வராது மாமா' என மறுபுறம் நின்று விஹாரியை தமிழிலேயே பேசி ஊக்கப்படுத்தினார். விஹாரி ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியும். 

 

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்