'இந்திய அணியில் விஜய் சங்கர் ஓரங்கட்டப்பட்டது ஏன்'?.. கலங்கவைக்கும் பின்னணி!.. உண்மைகளை உடைத்த அஸ்வின்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

'இந்திய அணியில் விஜய் சங்கர் ஓரங்கட்டப்பட்டது ஏன்'?.. கலங்கவைக்கும் பின்னணி!.. உண்மைகளை உடைத்த அஸ்வின்!

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியைத் தேர்வு செய்தபோது அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர் இடையில் கடும் போட்டி நிலவியது. அம்பத்தி ராயுடுவுக்குத்தான் வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்ட நிலையில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து விளக்கமளித்த தேர்வுக்குழுவினர், "விஜய் சங்கர் சிறந்த ஆல்-ரவுண்டர். பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் இவரால் சிறப்பாக சோபிக்க முடியும்" எனத் தெரிவித்தார்கள். இதனால், உலகக் கோப்பையின்போது விஜய் சங்கர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விஜய் சங்கர் அந்தத்தொடரில் மிகச்சிறப்பாக சோபிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. தற்போது அவர் ஐபிஎல், உள்ளூர் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் விஜய் சங்கர் ஒரு பேட்டி கொடுத்தார். அதில், "இந்திய அணியில் எனக்குச் சரிவர வாய்ப்பு கிடைப்பதில்லை. ஷேன் வாட்சன், கல்லீஸ் போன்ற வீரர்கள் போல நான் வந்திருப்பேன்" என தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

இந்நிலையில் விஜய் சங்கர் குறித்து தற்போது பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், "உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய விஜய் சங்கர், அனுபவம் வாய்ந்த வீரர். இவர் தொடர்ந்து விளையாடியிருந்தால் நிச்சயம் சிறந்த ஆல்-ரவுண்டராக வந்திருப்பார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் பலமுறை காயத்தால் அவதிப்பட்டு வந்ததால் இந்திய அணியில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை.

விஜய் சங்கருக்கு தற்போது 30-31 வயதாகிறது. இனிமேலும் காயத்தைச் சமாளித்து இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினம்தான். தமிழ்நாடு அணிக்காக சங்கர் தொடர்ந்து விளையாட வேண்டும். சங்கர் போன்ற திறமையான வீரர் தமிழ்நாடு அணிக்குத் தேவை" எனக் கூறினார்.

 

மற்ற செய்திகள்