கேப்டன் பதவி.. விலகிய கோலி.. ரோஹித், ராகுல் எல்லாம் அதுக்கு தான் வெயிட்டிங் போல.. பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியது, அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கேப்டன் பதவி.. விலகிய கோலி.. ரோஹித், ராகுல் எல்லாம் அதுக்கு தான் வெயிட்டிங் போல.. பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் வீரர்

டெஸ்ட் போட்டி வரலாற்றில், இந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த கேப்டன் விராட் கோலி தான். 68 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தங்கியுள்ள விராட் கோலி, அதில் 40 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையும், அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமையும், கோலியிடம் தான் உள்ளது.

ரசிகர்கள் கோரிக்கை

33 வயதே ஆகும் கோலி, இப்படி பல்வேறு சாதனைகளை, டெஸ்ட் போட்டிகளில் படைத்திருந்த போதும், திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது, நிச்சயம் அதிகம் கேள்விகளைத் தான் ஏற்படுத்தியது.

இருந்த போதும், அவரது முடிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதே போல, இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து, தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பங்களிப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும், கோலியின் முடிவு குறித்து, தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர், அதே போல, இந்திய அணியில் தற்போது ஆடி வரும் வீரர்களான ரோஹித் ஷர்மா, பும்ரா மற்றும் ராகுல் உள்ளிட்ட வீரர்களும், தங்களது ட்விட்டர் பக்கத்தில், கோலியின் முடிவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்திய அணியின் கேப்டனாக அவரது பங்களிப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.

அடுத்த கேப்டன் யார்?

இதனிடையே, இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது பற்றியும், கேள்விகள் தற்போது எழுந்துள்ளளது. ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், அஸ்வின் மற்றும் பும்ரா உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களின் பெயர்கள், யூகமாக கூறப்பட்டு வரும் நிலையில், பிசிசிஐ இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை.

யார் தான் உங்க சாய்ஸ்?

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப், கோலியின் முடிவு குறித்து சில கருத்துக்களை யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். 'கோலி ஒரு உலகத்தரமான வீரர். அவருடைய இடத்தில், அடுத்த கேப்டனாக நீங்கள் யாரை அறிவிக்க போகிறீர்கள்?. ரோஹித் முழு உடற்தகுதியுடன் இல்லை.

தென்னாப்பிரிக்க தொடர் முழுவதிலும் அவர் விலகியிருந்தார். அதற்கு காரணம், அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்பது தான். அதே போல, மற்றொரு வீரரான கே எல் ராகுலும், அணியை வழி நடத்துவதில் அதிக திறன் இல்லாதவர்.

உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

இவை அனைத்தையும் விட, என்னால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு,தற்போதைய இந்திய அணி வீரர்களின் பதில் என்ன என்பதை நான் கவனித்தேன்.

ராகுல், ரோஹித் உள்ளிட்ட அனைவரும் கோலியின் முடிவை ஏற்றுக் கொண்டனர். கோலி சிறப்பான கேப்டன் என்றால், அவரது முடிவிற்கு நீங்கள் ஏன் ஒத்துப் போகிறீர்கள்?. கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதை, நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்தது போல தான் எனக்கு தோன்றுகிறது.

பதிலடி கொடுப்பார்

விராட் கோலிக்கு என்ன நடந்ததோ, அது நிச்சயம் தவறான ஒன்று தான். அவருடைய இடத்தில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் இனி கொண்டு வாருங்கள். ஆனால், கோலி போல யாரும் ஆக முடியாது.

இனி வரும் போட்டிகளில், கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நிச்சயம் அனைவருக்கும் தக்க பதிலடி கொடுப்பார்' என ரஷீத் லத்தீப், கோலி முடிவு குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

VIRATKOHLI, ROHIT SHARMA, KLRAHUL, RASHID LATIF, ரஷீத் லத்தீப், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே எல் ராகுல்

மற்ற செய்திகள்