‘என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல’!.. டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கான் அணியை அறிவித்த ‘20 நிமிடத்தில்’ ரஷீத் கான் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கான் வீரர்களின் பட்டியலை அறிவித்த சில நிமிடங்களில் ரஷீத் கான் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. அதனால் இந்தியா உட்பட ஒவ்வொரு நாடும் தங்களது கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கு இளம் வீரர் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்ட 20 நிமிடங்களிலேயே கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக ரஷீத் கான் அறிவித்தார். ரஷீத் கானின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🙏🇦🇫 pic.twitter.com/zd9qz8Jiu0
— Rashid Khan (@rashidkhan_19) September 9, 2021
இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ‘அணியின் கேப்டன் என்ற முறையிலும், நாட்டின் குடிமகன் என்ற காரணத்தினாலும் உலகக்கோப்பை அணிக்கான தேர்வு விவகாரத்தில் பங்கேற்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஆனால் என்னுடைய கருத்தை கேட்காமலேயே வீரர்களின் தேர்வு நடைபெற்றதால், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். ஒரு வீரனாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவது எனக்கு பெருமை’ என ரஷீத் கான் பதிவிட்டுள்ளார்.
ரஷித் கான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக முகமது நபி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்