‘கேப்டனான ரஷித் கான்’.. அப்போ அவரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ரஷித் கானை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

‘கேப்டனான ரஷித் கான்’.. அப்போ அவரு?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கார் ஆப்கான் இருந்து வந்தார். அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துவந்த நிலையில், தற்போது அவரை நீக்கிவிட்டு மூன்று போட்டிகளுக்கு தனித்தனியாக மூன்று கேப்டன்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

அதன்படி ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக குல்பாடின் நைப்பும், துணைக் கேப்டனாக ரஷித் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரமத் ஷாவும், துணை கேப்டனாக ஹஸ்மத் ஷாகிதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் டி20 போட்டிக்கு கேப்டனாக ரஷித் கானும், துணை கேப்டனாக ஷபிக்குல்லா ஷபக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரஷித் கான் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சர்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

RASHIDKHAN, T20