சீனியர்களை விட்டுட்டு.. ஆல்ரவுண்டரை 'கேப்டனாக' நியமித்த அணி.. அவரை ஏன் கேப்டனா போடல?.. ரசிகர்கள் கேள்வி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். மாநில வாரியாக அணிகள் மோதும் இந்த தொடர் வரும் 9-ம் தேதி துவங்குகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு ரஞ்சி அணிக்கான வீரர்கள் தற்போது அறிவிக்கப்ட்டுள்ளனர்.
இந்த தொடருக்கு இளம் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் என சீனியர் வீரர்கள் இருந்தும் விஜய் சங்கரை கேப்டனாக நியமித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
🚨TN Squad for first 2 Ranji Trophy Matches 🚨
Vijay Shankar (C), B Aparajith (VC), M Vijay, Abhinav Mukund, K Dinesh Karthik, N Jagadeesan, R Ashwin, R Sai Kishore, T Natarajan, K Vignesh, Abhishek Tanwar, M Ashwin, M Siddharth, Shahrukh Khan, K Mukunth
— TNCA (@TNCACricket) December 2, 2019
அதேபோல கே.முகுந்தை அணியில் இருந்து விடுவிப்பதாகவும், வாஷிங்டன் சுந்தர் 2-வது மேட்சில் அணியுடன் இணைந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அனுபவம் மிகுந்த தினேஷ் கார்த்திக்கை ஏன் கேப்டனாக நியமிக்கவில்லை? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக அணி வீரர்கள் விவரம்:
விஜய் சங்கர் (கேப்டன்), பி அபரஜித் (துணை கேப்டன்) முரளி விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், என். ஜெகதீசன், ஆர் அஸ்வின், ஆர் சாய் கிஷோர், டி நடராஜன், கே விக்னேஷ், அபிஷேக் தன்வார், எம் அஸ்வின், எம் சித்தார்த், ஷாரூக்கான், கே முகுந்த்.