"பென் ஸ்டோக்ஸ்-அ CSK எடுத்ததும் ராஜஸ்தான் டீம்க்கு கோவம் வந்துடுச்சு போல 😅".. இணையத்தில் பட்டையை கிளப்பும் ட்வீட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்றது.
இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதில், சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிக தொகையாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் மாறி உள்ளார் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மிக முக்கியமான வீரர் சென்னை அணியில் இணைந்துள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, ஐபிஎல் தொடரில் தோனியுடன் இணைந்து புனே அணியில் ஆடி இருந்தார் பென் ஸ்டோக்ஸ். அதன் பின்னர், தற்போது மீண்டும் தோனியுடன் இணைந்து சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டோக்ஸ் பெரிய அளவில் பங்கு வகிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு, அதிக கவனம் பெற்று வருகிறது.
ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ஷேன் வாட்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சென்னை அணிக்காக ஆடி உள்ளனர். இதில் ரவீந்திர ஜடேஜா அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க உள்ளார். இப்படி ராஜஸ்தான் அணியில் இருந்து வந்த ஷேன் வாட்சன் மற்றும் ஜடேஜா ஆகியோர் பெரிய அளவில் சென்னை அணியின் தூணாக இருந்துள்ளனர்.
அந்த வரிசையில், தற்போது ராஜஸ்தான் அணிக்காக ஆடி இருந்த பென் ஸ்டோக்ஸும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள சூழலில், ஜடேஜா, வாட்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்த ராஜஸ்தான் அணி, "ராஜஸ்தான் ஆல் ரவுண்டர்ஸ் 🤝 சிஎஸ்கே 😏" என குறிப்பிட்டுள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்கள் சென்னை அணியில் சிறப்பாக ஆடுவதை போல, ஸ்டோக்ஸும் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
RR all-rounders 🤝 CSK. 😏 pic.twitter.com/wWsy89Wrnr
— Rajasthan Royals (@rajasthanroyals) December 23, 2022
மற்ற செய்திகள்