Video: எப்டி போனேனோ 'அப்டியே' வந்துட்டேன்... 21 வருட ரெக்கார்டை 'உடைத்தெறிந்த' வீரர்... கப்பு நமக்குத்தான் ஜி 'குதூகலிக்கும்' பிரபல அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சில வருடங்களுக்கு முன் 14.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, காஸ்ட்லியான வீரராகத் திகழ்ந்த ஜெயதேவ் உனத்கட் தன்னுடைய மோசமான பார்ம் காரணமாக ஐபிஎல்லில் தன்னுடைய மவுசை படிப்படியாக இழக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் ரஞ்சி போட்டிகளின் வாயிலாக அவர் மீண்டும் தன்னுடைய பார்மை வெளிப்படுத்தி அசர வைத்துள்ளார்.சவுராஷ்டிரா-குஜராத் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் ஜெயதேவ் சுமார் 7 விக்கெட்டுகளை 2-வது இன்னிங்சில் வீழ்த்தினார்.

Video: எப்டி போனேனோ 'அப்டியே' வந்துட்டேன்... 21 வருட ரெக்கார்டை 'உடைத்தெறிந்த' வீரர்... கப்பு நமக்குத்தான் ஜி 'குதூகலிக்கும்' பிரபல அணி!

இதன் காரணமாக சவுராஷ்டிரா அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. மொத்தமாக இந்த அரையிறுதி போட்டியில் 10 விக்கெட்டுகளை ஜெயதேவ் வீழ்த்தி சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு பாதை வகுத்தார். ஒட்டுமொத்தமாக இந்த ரஞ்சி தொடரில் சுமார் 65 விக்கெட்டுகளை ஜெயதேவ் உனத்கட் வீழ்த்தி இருக்கிறார். 1999-ம் ஆண்டில் கர்நாடக அணியை சேர்ந்த டூடா கணேஷ் 62 விக்கெட்டுகளை எடுத்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது உனத்கட் 65 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த 21 வருட ரெக்கார்டை முறியடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் உனத்கட்டின் இந்த சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குதூகலமாக கொண்டாடி வருகிறது. இதுகுறித்து அந்த அணி,'' 65 விக்கெட்டுகளை எடுத்து ஜெயதேவ் உனத்கட் புதிய சாதனை படைத்திருக்கிறார். அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் உனத்கட்டின் இந்த பார்ம் அந்த அணிக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற மார்ச் 9-ம் தேதி தொடங்கவிருக்கிறது. பலம் மிகுந்த கர்நாடகாவை வீழ்த்தி பெங்கால் அணியும், குஜராத் அணியை வீழ்த்தி சவுராஷ்டிரா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதால் இந்த இறுதிப்போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.