“தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் அவர்தான்”.. சுரேஷ் ரெய்னா சொன்ன சூப்பர் டூப்பர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனிக்கு பின்பு சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள வீரர் குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது. இதுவரை 4 ஐபிஎல் கோப்பைகளில் சிஎஸ்கே அணி வென்றுள்ளது.
கடந்த 2020-ம் ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். அதனால் ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் ஓய்வு பெற உள்ளதாக அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் தோனி அதை திட்டவட்டமாக மறுத்தார். அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. அதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதனை அடுத்து 2021-ம் ஆண்டு தொடர் வெற்றிகளை பெற்று சிறப்பான கம்பேக் கொடுத்தது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, சென்னை அணியை தோனிக்கு பின்பு வழிநடத்த உள்ள வீரர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘அம்பத்தி ராயுடு, ஜடேஜா, பிராவோ, ராபின் உத்தப்பா போன்ற சீனியர் வீரர்கள் இருப்பதுதான் சிஎஸ்கே அணையின் சிறப்பு. இந்த நான்கு பேருமே சென்னை அணியை வழிநடத்த தகுதியானவர்கள் தான். ஆனாலும் ஜடேஜாவே சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது’ என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே அணிக்காக பல வருடங்கள் விளையாடியுள்ளார். முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி உட்பட எந்த அணியும் எடுக்கவில்லை. தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்