"'நடராஜன்', 'வருண்' எல்லாம் ஆடுறது கஷ்டம்??... அவங்களுக்கு பதிலா களமிறங்க போறது இந்த 'இளம்' வீரர் தான்!!..." வெளியாகியுள்ள லேட்டஸ்ட் 'தகவல்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.

"'நடராஜன்', 'வருண்' எல்லாம் ஆடுறது கஷ்டம்??... அவங்களுக்கு பதிலா களமிறங்க போறது இந்த 'இளம்' வீரர் தான்!!..." வெளியாகியுள்ள லேட்டஸ்ட் 'தகவல்'!

இதற்கான இந்திய அணி, கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் கலக்கிய ராகுல் டெவாட்டியா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரது பெயரும் இடம்பெற்றிருந்தது. மேலும், ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமாகி அசத்திய தமிழக வீரர் நடராஜனும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்காக தேர்வாகியிருந்தார்.

rahulchahar likely to be added for the t20 series against england

ஆனால், இதில் சில வீரர்கள் களமிறங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடராஜனுக்கு முட்டு மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் டி 20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்றால் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர், ஃபிட்னஸ் தேரில் தேர்ச்சி பெறவில்லை என தேசிய அகாடமி கூறியுள்ளது.

rahulchahar likely to be added for the t20 series against england

டி 20 தொடரின் முதல் போட்டி ஆரம்பிக்க, இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வருண் மற்றும் ராகுல் ஆகியோர், அணியில் இடம்பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதன் காரணமாக, 21 வயதான இளம் வீரர் ராகுல் சஹர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இந்திய அணியினருடன் இணைந்து, அகமதாபாத் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

rahulchahar likely to be added for the t20 series against england

இவர்  ஏற்கனவே, இந்திய அணிக்காக டி 20 போட்டியில் அறிமுகமாகி, ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் ராகுல் சஹர், சிறப்பாக பந்து வீசி வருகிறார். மற்ற வீரர்களுக்கு சிக்கல் உள்ளதன் காரணமாக, தனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதனை ராகுல் சஹர் திறம்பட பயன்படுத்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மற்ற செய்திகள்