தமிழக வீரரை நேருக்கு நேர் பாத்து மொறச்ச ராகுல் டெவாட்டியா.. "எதுக்கு இவ்ளோ கோவத்துல பாக்குறாரு??.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி இருந்தது.
இந்த போட்டியில், குஜராத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தனியாளாக போராடிய தமிழக வீரர்
இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் மட்டும் தனியாளாக ஆடி ரன் சேர்க்க, மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குஜராத் அணி. மூன்றாவது வீரராக வந்து, கடைசி வரை களத்தில் நின்ற சாய் சுதர்ஷன், 50 பந்துகளில், ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்திருந்தார்.
ஒரே ஓவரில் 28 ரன்கள்
ஐபிஎல் தொடரில் முதல் அரை சதத்தையும் சாய் பதிவு செய்திருந்தார். அதிகபட்சமாக, பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. 16 ஓவர்களில் போட்டியை முடித்த பஞ்சாப் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷமி வீசிய 16 ஆவது ஓவரில், லிவிங்ஸ்டன் அடித்த 28 ரன்கள் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
அதிகபட்சமாக, ஷிகர் தவான் 62 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், இந்த வெற்றியின் மூலம், 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கும் பஞ்சாப் அணி முன்னேறி உள்ளது. நடப்பு தொடரில், 10 போட்டிகள் ஆடியுள்ள குஜராத், இரண்டில் மட்டுமே தோல்வி (ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக) அடைந்துள்ளது.
கோபப்பட்ட டெவாட்டியா..
இந்நிலையில், குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிவிங்ஸ்டன் வீசிய 12 ஆவது ஓவரில், பந்தினை எதிர்கொண்ட டெவாட்டியா, கவர் பாய்ண்ட் திசையில் அருகே அடித்து விட்டு சிங்கிள் ஓட பார்த்தார். ஆனால், மறுபக்கம் நின்ற சாய் சுதர்ஷன் ரன் ஓடாமல் நிற்க, ஓடி வந்த வேகத்தில் மீண்டும் கிரீஸுக்குள் போனார் டெவாட்டியா.
Tewatia angry! pic.twitter.com/7okGTIC0S8
— Cricketupdates (@Cricupdates2022) May 3, 2022
இதனால், கோபம் அடைந்த டெவாட்டியா, அப்படியே முறைத்தபடி சாய் சுதர்சனை பார்த்துக் கொண்டு சில வினாடிகள் நின்றார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்