‘தயவுசெஞ்சு ஆஸ்திரேலியாவுக்கு அவர உடனே அனுப்புங்க’... ‘அப்பதான் இந்திய அணியை காப்பாத்த முடியும்’... ‘பிசிசிஐ-க்கு அறிவுரை சொல்லும் முன்னாள் வீரர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் பயிற்சியாளராக கிரிக்கெட் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த வருடம் போல இந்த வருடமும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யும் என்று கருதப்பட்டது. ஆனால் மிக மோசமாக 36 ரன்களுக்கு அவுட்டாகி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் வீரரும், பிசிசிஐ-யின் முன்னாள் தேர்வுக்குழு சேர்மனுமான வெங்சர்க்கார் ராகுல் டிராவிட்டை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு பிசிசிஐ அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில் ‘இந்திய அணிக்கு உதவ பி.சி.சி.ஐ. டிராவிட்டை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த மாதிரி நேரங்களில் அவரை தவிர வேறு யாராலும் பேட்ஸ்மேன்களை சிறப்பாக வழிநடத்த முடியாது. அவர் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். எப்படியிருந்தாலும், கடந்த 9 மாதங்களாக கோவிட் காரணமாக என்.சி.ஏ மூடப்பட்டது. இப்போதாவது அவரை அனுப்பி வையுங்கள்.
கேப்டன் விராட் கோலி இல்லாத அடுத்த 3 போட்டிகளில், டிராவிட்டின் கிரிக்கெட் அனுபவங்களை பிசிசிஐ, இந்திய அணிக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். கோவிட் காரணமாக தனிமைப்படுத்துதல் விதிகள்இருந்தாலும், ஜனவரி 7-ல் நடக்கும் 3-வது போட்டிக்கு முன்பான வலைப்பயிற்சியிலிருந்தாவது அவரது உதவியை பெற்று இந்திய அணியை வெற்றிபாதைக்கு கொண்டு செல்லமுடியும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்களும், இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மோசமான அணுகுமுறையே காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளனர். இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏ அணியை அவர் சிறந்த அணியாக மாற்றினார். அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய ஏ வெற்றிபெறுவதற்கும் இவரே முக்கிய காரணமாக இருந்தார்.
வீரர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கண்டுபிடித்து அவர்களை ராகுல் டிராவிட் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இதனால் அவர்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டும். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்தால்தான் இந்திய அணி புதிய பலம் பெறும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், தோனி இல்லாமல் இந்திய அணி தடுமாறுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
So much class! Enjoy this epic knock from batting maestro Rahul Dravid at the Adelaide Oval in 2003.
Read his Legends Month profile HERE: https://t.co/oIdQ3TZaZQ pic.twitter.com/YkHx4Oluxe
— cricket.com.au (@cricketcomau) May 18, 2018
Who is tha best coach ?
My advice : Rahul Dravid
Ravi Shastri.RT
Rahul Dravid Like pic.twitter.com/U8FrVAOjRW
— UrstrulyMukesh45 (@NuthalapatiMuk4) December 19, 2020
The lineup would look like this.
Going by Form & Experience.
S. Dhawan
R. Sharma
C. Pujara
V. Kohli
Kl. Rahul
A. Rahane
R. Pant
R. Ashwin
J. Bumrah
U. Yadav
M. Shami / Bhuvneshwar Kumar
Coach- Rahul Dravid 🙏🏼 https://t.co/qkpqCTRtFQ
— Nikhil Siddhartha (@actor_Nikhil) December 19, 2020
Finisher💥
He might tackled to score well but his runs never Ebrassed the team!! #Dhoni #DhoniFanForLife 💜 pic.twitter.com/SeKMSfLJ0K
— Girish..... (@itzgkt) December 19, 2020
மற்ற செய்திகள்