'இத சொல்றதுக்கு எவ்வளவு பெரிய மனசு வேணும்'... 'டிராவிட் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை'... நெகிழ்ந்து போன ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது முதல் அந்த அணி வீரர்கள் அனைவருக்கும் உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பிய நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் ஷமி, உமேஷ் யாதவ், கே.எல் ராகுல், பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர்.
அதிக அனுபவமில்லாத இளம் வீரர்களுடன், ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் நிறைந்த பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில், இந்திய அணி வென்று மிகப்பெரிய சாதனை படைத்திருந்தது. இந்திய அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு கேப்டனாக செயல்பட்ட ரஹானேவிற்கும், அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும், சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய இளம் வீரர்களான சுப்மன் கில், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், சிராஜ் உள்ளிட்டோர், இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் கொடுத்த பயிற்சி மூலம் வளர்ந்தவர்களாவர். இந்திய அணியின் எதிர்கால வீரர்களை தற்போதே பட்டை தீட்டியதில்,முக்கிய பங்கு டிராவிட்டுக்கு உண்டு.
இதனால், தற்போதைய இந்திய அணியின் வெற்றிக்கு டிராவிட்டின் பங்கு மிகப் பெரிது என சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட கிரிக்கெட் நிபுணர்கள் வரை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், 'இந்திய அணியின் வெற்றிக்கு நான் தான் காரணம் என சொல்ல முடியாது. என்னை மட்டுமே புகழ்வது தேவையற்ற செயலாகும். இந்த வெற்றி, அந்த இளம் வீரர்களின் முயற்சியால் கிடைத்த வெற்றி. அவர்களின் கடின உழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது. அவர்கள் மட்டுமே இந்த வெற்றிக்கு சொந்தக்காரர்கள்' என தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியை உருவாக்கியதில் முக்கிய பங்குள்ள டிராவிட், பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ள கருத்துக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்