‘ஒருவேளை நாம தோத்திருந்தா...!’ த்ரில் வெற்றிக்கு பின் டிராவிட் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. பவ்வியமாக நின்று கேட்ட வீரர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றபின் இந்திய வீரர்களிடம் ராகுல் டிராவிட் கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

‘ஒருவேளை நாம தோத்திருந்தா...!’ த்ரில் வெற்றிக்கு பின் டிராவிட் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. பவ்வியமாக நின்று கேட்ட வீரர்கள்..!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. அதனால் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் இந்திய அணி விளையாடியது. அதேபோல் இலங்கை அணியும் தோல்வியை தவிர்க்க முனைப்பு காட்டியது.

Rahul Dravid’s speech in dressing room after India win 2nd ODI

அந்தவகையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 275 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ஆனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான நிலையில் இந்திய அணி இருந்தது.

Rahul Dravid’s speech in dressing room after India win 2nd ODI

இக்கட்டான சமயத்தில் ஜோடி சேர்ந்த தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர் குமார் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு, 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசினார். அதில், ‘ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது அற்புதமான விஷயம். ஒருவேளை போட்டியில் நாம் தோல்வி அடைந்திருந்தாலும், கடைசி வரை போராடுவது என்பது மிகவும் முக்கியம். சிறப்பாக விளையாடியுள்ளீர்கள்’ என ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்