"இந்தியா கிரிக்கெட் டீம்ல அந்த பிரச்சனை இருக்கே".. சுட்டிக்காட்டிய பத்திரிக்கையாளர்.. ராகுல் டிராவிட்டின் கலகல பதில்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

"இந்தியா கிரிக்கெட் டீம்ல அந்த பிரச்சனை இருக்கே".. சுட்டிக்காட்டிய பத்திரிக்கையாளர்.. ராகுல் டிராவிட்டின் கலகல பதில்!!

                              Images are subject to © copyright to their respective owners

நாக்பூரில் வைத்து நடந்த முதல் டெஸ்ட் போட்டி, மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வந்திருந்தது. இந்த போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. முதல் டெஸ்ட் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு வேற லெவலில் ஆட்டம் காட்டி இருந்தது. இதனால், ஆஸ்திரேலியா அணி ரன் அடிக்க முடியாமல் தடுமாறி தோல்வியை தழுவி இருந்தது.

தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி, டெல்லி மைதானத்தில் வைத்து 17.02.2023 அன்று ஆரம்பமாகிறது. வெற்றியை தொடர இந்திய அணி ஒரு பக்கமும், முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி ஒரு பக்கமும் களமிறங்கும் என்பதால் நிச்சயம் இந்த போட்டியும் விறுவிறுப்புடன் தான் இருக்கும் என தெரிகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் அரிதாக இருப்பது பற்றி கேள்வி ஒன்றை பத்திரிக்கையாளர்கள் எழுப்பியிருந்தார்.

Rahul Dravid response in press conference about left arm bowlers

Images are subject to © copyright to their respective owners

மிட்செல் ஸ்டார்க், ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட வெளிநாட்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் போல இந்திய அணியில் இல்லாதது பற்றி குறிப்பிட்டு கேள்வி எழுப்ப இதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட், "அணி நிர்வாகம் நிச்சயம் இந்த விஷயத்தில் திறமையாளர்களை எடுக்க முயலும். அர்ஷ்தீப் சிங் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் இளம் வீரர் என்பதால் நிச்சயம் இனிவரும் காலங்களில் மேம்படுத்திக் கொள்வார்.

இடது கை பந்துவீச்சாளர்கள் இன்னும் நிறைய பேர் உள்ளனர். ஆனால் இடது கை பந்து வீசுவது மட்டுமே அணியில் இடம்பெற உதவாது. நீங்கள் சிறப்பாக பந்து வீசவும் வேண்டும்.

நாங்கள் அதை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதன் முக்கியத்துவம் எங்களுக்கும் தெரியும். ஜாகீர்கான், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் இடது கையில் பந்து வீசியதால் மட்டுமே வாய்ப்பை பெறவில்லை. அவர்கள் நன்றாக பந்து வீசவும் செய்தனர்" என ராகுல் டிராவிட் கூறினார்.

Rahul Dravid response in press conference about left arm bowlers

Images are subject to © copyright to their respective owners

தொடர்ந்து, மிட்செல் ஸ்டார்க், ஷாஹீன் அப்ரிடி என அதிக உயரமுள்ள இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை பத்திரிகையாளர் சுட்டிக்காட்டி இருந்த சூழலில், இதற்கு விளக்கம் கொடுத்த ராகுல் டிராவிட், "உங்களுக்கு தெரிந்த 6 அடி 4 அங்குல உயரத்தில் யாராவது இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஆனால், இந்தியாவில் 6 அடி 5 அங்குல உயரத்தில் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கிடைப்பது அரிதான ஒன்று" என ஜாலியாகவும் பதில் ஒன்றை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

RAHUL DRAVID, IND VS AUS

மற்ற செய்திகள்