VIDEO: ‘தட்டிக்கொடுத்து பாராட்டிய டிராவிட்’.. யார் இவர்..? கடைசி டி20 போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரை தட்டுக்கொடுத்து பாராட்டிய ராகுல் டிராவிட்டின் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று முன்தினம் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா 56 ரன்கள் எடுத்தார். அதேபோல் 9-வது வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் தீபக் சஹார் 8 பந்துகளில் 21 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியால் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 17.2 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பீல்டிங் பயிற்சியாளர் திலீப்பை பாராட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் போட்டியின் 14-வது ஓவரில் நியூஸிலாந்து நடப்பு கேப்டன் மிட்செல் சாண்ட்னர், மிட் விக்கெட்டில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார்.
— pant shirt fc (@pant_fc) November 22, 2021
அப்போது அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் நேராக ஸ்டம்ப்பைப் பார்த்து பந்தை வீசி ரன் அவுட் செய்தார். உடனே டக் அவுட்டில் அருகில் அமர்ந்திருந்த பீல்டிங் பயிற்சியாளர் திலீப்பின் முதுகில் தட்டிக்கொடுத்து ராகுல் டிராவிட் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்