‘மனசுல நின்னுட்டீங்க’.. மேட்ச் முடிஞ்சதும் டிராவிட்டும், கோலியும் செஞ்ச செயல்.. இலங்கை ரசிகர்களிடையே ‘லைக்ஸ்’ அள்ளிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை வீரருக்கு ராகுல் டிராவிட் மற்றும் விராட்கோலி வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘மனசுல நின்னுட்டீங்க’.. மேட்ச் முடிஞ்சதும் டிராவிட்டும், கோலியும் செஞ்ச செயல்.. இலங்கை ரசிகர்களிடையே ‘லைக்ஸ்’ அள்ளிய வீடியோ..!

"இத்தனை வருசமாக கட்டிக்காத்து வந்த ரெக்கார்டு".. 5 வருசத்தில் முதல்முறை சறுக்கிய கோலி..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வரும் இந்த போட்டிதான் இலங்கை வீரர் சுரங்கா லக்மலின் கடைசி கிரிக்கெட் போட்டி. இப்போட்டியுடன் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

இதனால், ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் சுரங்கா லக்மாலுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோவை பிசிசிஐ தங்களது பதிவிட்டிருக்கும் இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Rahul dravid and Virat kohli congrats Sri Lanka player

இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுரங்கா லக்மால், 171 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரே டெஸ்டில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 109 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் அதிகபட்சமாக 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அதேபோல் 11 டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அச்சு அசலா அவர மாதிரியே..’.. ஒவ்வொரு தாய் மாமாவும் இத பார்த்தா கண் கலங்கிடுவாங்க.. நெஞ்சை உருக்கிய குடும்பம்..!

CRICKET, RAHUL DRAVID, VIRAT KOHLI, SRI LANKA PLAYER, HEAD COACH RAHUL DRAVID, SRI LANKA PLAYER SURANGA LAKMAL

மற்ற செய்திகள்