T20 போட்டியில் இரட்டை சதம்.. கிரவுண்ட்ல வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்டிய வானவேடிக்கை.. மிரண்டு போன ஆடியன்ஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅமெரிக்காவில் நடைபெற்றுவரும் அட்லாண்டா ஓபன் T20 தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரஹ்கீம் கார்ன்வால் இரட்டை சதம் விளாசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
Also Read | பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி.. கோவத்துல கணவர் செய்த பதறவைக்கும் காரியம்..!
அட்லாண்டா ஓபன் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 16 அணியும் நான்கு குழுவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. கோப்பையை வெல்லும் அணிக்கு 75,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அட்லாண்டா ஃபயர் மற்றும் ஸ்கொயர் டிரைவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற அட்லாண்டா ஃபயர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதிரடி ஆட்டம்
இதனையடுத்து ரஹ்கீம் கார்ன்வால், ஸ்டீவன் டெய்லருடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரஹ்கீம், எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருக்கு வீசப்பட்ட பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவோ, அல்லது பவுண்டரிகளாகவோ மாறியது. ஸ்டீவன் 53 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த சமி அஸ்லாம் அதிரடியை வெளிப்படுத்தினார். இதன் பலனாக 20 ஓவர் முடிவில் அட்லாண்டா ஃபயர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை குவித்தது.
களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கார்ன்வால் 77 பந்துகளை மட்டுமே சந்தித்து 205 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 17 பவுண்டரிகள் மற்றும் 22 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய ஸ்கொயர் ட்ரைவ் அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக அட்லாண்டா ஃபயர் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த கார்ன்வால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிறிஸ் கெயில்
இருப்பினும், அட்லாண்டா ஓபன் தொடர் அங்கீகரிக்கப்படாதது என்பதால் கார்ன்வாலின் இந்த பேட்டிங்கை சர்வதேச போட்டிகளுடன் ஒப்பிட முடியாது. தற்போதைய நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை இதுவரையில் யாரும் முடியடிக்கவில்லை. 2013 ஆம் ஆண்டு IPL-ல் பெங்களூரு அணிக்காக களமிறங்கிய கெயில் புனேவிற்கு எதிரான போட்டியில் 175 ரன்கள் எடுத்ததே இதுவரையில் சாதனையாக இருந்துவருகிறது.
மற்ற செய்திகள்