இந்திய அணியில் களம் இறங்க போகும் ‘தமிழர்’.. உறுதி செய்த ரஹானே.. டெஸ்டில் நடக்க போகும் மாற்றங்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களமிறங்க உள்ள வீரர் குறித்து ரஹானே தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் களம் இறங்க போகும் ‘தமிழர்’.. உறுதி செய்த ரஹானே.. டெஸ்டில் நடக்க போகும் மாற்றங்கள்..!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

Rahane confirms, Shreyas Iyer to make debut against New Zealand

இதன் முதல் போட்டி நாளை (25.11.2021) கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் விராட் கோலி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ரஹானே கேப்டனாக இந்திய அணியை வழி நடத்துகிறார். மேலும் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இளம் வீரர்கள் பலரும் இந்த தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Rahane confirms, Shreyas Iyer to make debut against New Zealand

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடப்பு கேப்டன் ரஹானேவிடம், இப்போட்டியில் தமிழரான ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஹானே, ‘ஆமாம், ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்’ என தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shreyas Iyer (@shreyas41)

இதனிடையே இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHREYASIYER, RAHANE, INDVNZ

மற்ற செய்திகள்