"கேப்டனா இருக்குறதுக்காகவே பொறந்தவரு..." இந்திய வீரரை புகழ்ந்த 'இயான் சேப்பல்'... தோனி, கோலியும் இல்ல... "அப்போ யார சொல்லியிருப்பாரு??..."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதையொட்டி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பிச் சென்றார்.
இதனால், அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்பட்டு வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் சுருண்ட இந்திய அணி, மிகவும் மோசமான தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அதற்கு அடுத்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிய கையே அதிகம் ஓங்கியிருந்தது. பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் இருந்து, ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவது என அனைத்திலும் ரஹானே மிகவும் தேர்ந்த கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
ரோஹித், கோலி, ஷமி என முக்கிய வீரர்கள் யாருமில்லாத இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த மிக முக்கிய பங்காற்றியிருந்தார் ரஹானே. இவரது கேப்டன்சியை பல முன்னாள் வீரர்கள் பாராட்டியிருந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் இயான் சேப்பலும் தனது பங்கிற்கு பாராட்டித் தள்ளியுள்ளார்.
ரஹானே கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் கேப்டனாக செயல்பட்டதை பாராட்டி பேசிய இயான் சேப்பல், அப்போதே அவர் தேர்ந்த கேப்டன் என்பதை தான் உணர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதே போல, அணியை தலைமை தாங்க வேண்டியே பிறந்தவர் ரஹானே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களான வார்னர் - ஸ்மித் ஆகியோர் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது கேப்டனாக இருந்த ரஹானே, அறிமுக வீரர் குல்தீப் யாதவிடம் பந்து வீசும் படி கூறினார். அது தைரியமான முடிவு என அப்போது நான் நினைத்தேன். குல்தீப் யாதவ் வார்னரின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அது தான் கேப்டனாக ரஹானேவின் வெற்றி. அவர் மிகவும் தைரியமாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படக் கூடியவர். இது இரண்டையும் தாண்டி, அவரிடம் கேப்டனாக சிறந்த குணமுள்ளது. எத்தகைய சூழலிலும் மிகவும் அமைதியாக செயல்படக் கூடியவர்' என இயான் சேப்பல் ரஹானேவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்