MI வீரர் ரோஹித் அவுட் ஆனதும் சோகமான அவரது மனைவி.. உடனே RR வீரர் அஷ்வின் மனைவி செஞ்ச காரியம்.. நெகிழ்ந்த நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா அவுட் ஆனதால் அவரது மனைவி சோகமடைந்தார். அப்போது அஷ்வினின் மனைவி செய்த காரியம் ரசிகர்களை நெகிழ வைத்தது.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கிய 15 வது சீசன் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 44 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார்.
சேஸிங்
இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வினின் சுழலில் சிக்கி அவுட் ஆனார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 26 ரன்களில் வெளியேற அடுத்துவந்த திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வழக்கமான அதிரடியில் அதகளம் செய்த சூரிய குமார் யாதவ் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். திலக் வர்மா 35 ரன்னிலும் பொல்லார்ட் 10 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் களத்தில் இருந்த டிம் டேவிட் மற்றும் சாம்ஸ் ஜோடி காட்டிய அதிரடியில் மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
சோகமான ரித்திகா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 ரன்னில் அஷ்வினின் பந்தில் மிச்சேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் வந்திருந்த அவரது மனைவி ரித்திகா சோகமடைந்தார். அப்போது, ராஜஸ்தான் வீரர் அஷ்வினின் மனைவி ப்ரீத்தி ரித்திகாவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இதனைக்கண்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போயினர்.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்