அவுட் கேட்ட பவுலர்.. சைலண்டாக நின்ற 'Umpire'.. மறுகணமே நடந்த சம்பவம்.. "ப்பா, மனுஷன் நெஜமாவே வேற லெவல் தான்.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் 29.04.2022 அன்று நடைபெற்றிருந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்தது.
இந்த போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்திய லக்னோ, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.
முதலில் பேட் செய்த லக்னோ அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் டி காக் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தார்.
தடுமாற்றம் கண்ட லக்னோ..
ஆனால், அவர்கள் அவுட்டான பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி, ரன் அடிக்கவும் பெரிய அளவில் தடுமாறி இருந்தது. அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால், 153 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக டி காக் 46 ரன்கள் எடுத்திருந்தார். மறுபக்கம், பஞ்சாப் பவுலர் ரபாடா 4 விக்கெட்டுகளை அள்ளி இருந்தார்.
ஆறாவது வெற்றி பெற்ற லக்னோ..
இதன் பின்னர், இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க தடுமாறி இருந்தது. ரன்கள் குறைவாக இருப்பதால், மிக அசத்தலாக பந்து வீசிய லக்னோ அணி, மொத்தமாக ஆதிக்கம் செலுத்தி இருந்தது. கடைசியாக, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப். இதன் மூலம், 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், நடப்பு தொடரில் தங்களின் ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நெகிழ வைத்த டி காக்..
மறுபக்கம், பஞ்சாப் அணி 9 போட்டிகள் விளையாடி, 8 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது, லக்னோ வீரர் டி காக் செய்துள்ள செயல் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
லக்னோ அணியில் டி காக் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர், சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தீப் ஷர்மா வீசிய 14 ஆவது ஓவரில், 46 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார் டி காக். முன்னதாக, அவர் அடித்த பந்து பேட்டில் பட்டு, கீப்பர் ஜிதேஷ் ஷர்மா கைக்கு சென்றது. உடனடியாக, சந்தீப் ஷர்மா மற்றும் பஞ்சாப் வீரர்கள், நடுவரிடம் அப்பீல் செய்தனர். ஆனால் நடுவரோ அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.
நேர்மையாக வெளியேறிய வீரர்..
இருந்தும், பேட்ஸ்மேன் டி காக், தன்னுடைய பேட்டில் பட்டது தெரிந்ததால், நியாயத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஒரு வேளை, பஞ்சாப் அணியினர் உறுதியாக இருந்தால், டிஆர்எஸ் கூட அப்பீல் செய்திருக்கலாம். இருந்த போதும், அதற்காக காத்திருக்காமல், நேர்மையாக வெளியேறிய டி காக்கை சந்தீப் சர்மா தட்டிக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் பலரும் டி காக்கின் Sportsmanship-பை பாராட்டி இணையத்தில் கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்