'மழ' வர்ற மாதிரி இருக்கு ... 'அழுதா' ரோடு தெரியாது.. 'பாத்து போங்க'.. ரசிகர்களைக் கலாய்த்த 'காவல்துறை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து போலீஸார் கலாய்த்து பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் பரவி வருகிறது.

'மழ' வர்ற மாதிரி இருக்கு ... 'அழுதா' ரோடு தெரியாது.. 'பாத்து போங்க'.. ரசிகர்களைக் கலாய்த்த 'காவல்துறை'!

நடப்பு உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று மோதியது. இதில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் விழ்த்தியது. இதனால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கும் முதல் அணியாக ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை, இங்கிலாந்து அணியை கலாய்க்கும் வகையில், ‘பிரிஸ் பேனில் பாதுகாப்பாக டிரைவிங் செய்யுங்கள். வானிலை மோசமாக இருப்பதால், நீங்கள் கண் கலங்கியபடி சென்றால் கண்ணீர் உங்களை டிரைவ் செய்ய விடாமல் மறைக்கும்’ என்று அட்வைஸ் செய்யும் வகையிலான ஒரு ட்வீட்டை, பதிவிட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்தில் மழையினால் நிரம்பிய, வார்செஸ்டெரிஷில் இருக்கும் வெள்ளத்தின் புகைப்படத்தைப் பதிவிட்டு, இங்கிலாந்து தோல்வியடைந்த செய்தியைக் கேட்டு இப்பகுதி ரசிகர்கள் அழுதுள்ளதால் இந்த வார்செஸ்டெரிஷ் குளம் இப்படி நிரம்பியுள்ளதோ? என இன்னொருவர் ட்வீட் செய்துள்ளார்.

இங்கிலாந்தின் ஹோம் மைதானத்தில் நடந்த இந்த மேட்சில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றுப்போன பிறகு இங்கிலாந்து அணி, அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமானால்,  அடுத்தடுத்து இந்தியாவுடனும், நியூஸிலாந்துடனும் நடக்கவுள்ள போட்டிகளில் வென்றாக வேண்டிய நெருக்கடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, AUSVENG, QUEENSLAND