'வெண்கல' பதக்கத்தை வென்றாரா பிவி சிந்து...? 'விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்...' - சீன வீராங்கனையுடன் பலப்பரீட்சை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.

'வெண்கல' பதக்கத்தை வென்றாரா பிவி சிந்து...? 'விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்...' - சீன வீராங்கனையுடன் பலப்பரீட்சை...!

ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (01-08-2021) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து - சீனாவைச் சேர்ந்த ஹி பிங் ஜியா ஆகியோர் ஆக்ரோஷமாக பலப்பரீட்சை நடத்தினர். மிகவும் தீவிரமாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டை 21-13 என்ற எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை கைப்பற்றுவதற்காக இருவரும் போராடினர்.

PV Sindhu wins bronze medal in women's singles badminton

பிவி சிந்து புள்ளிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், புள்ளிகளில் மிகவும் நெருங்கி வந்தார் ஹி பிங் ஜியா. இதன் காரணமாக 2-வது செட் விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஆனாலும், ஆட்டத்தை மிகவும் அற்புதமாக கொண்டுசென்ற பிவி சிந்து 21 - 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை தோற்கடித்தார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

PV Sindhu wins bronze medal in women's singles badminton

2016-ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து இம்முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டியில் சிந்து தோல்வியடைந்த காரணத்தினால் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

மற்ற செய்திகள்