Kadaisi Vivasayi Others

கடைசி நேரத்துல இப்படி சொல்லிட்டாங்களே ப்ரீத்தி ஜிந்தா.. இனி எங்க கேமரா யாரை 'Focus' பண்ணும்! ரசிகர்கள் சோகம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன்பாக ஐபிஎல் மெகா ஏலம் நாளைய தினம் மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 12 & 13) என இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளது.

கடைசி நேரத்துல இப்படி சொல்லிட்டாங்களே ப்ரீத்தி ஜிந்தா.. இனி எங்க கேமரா யாரை 'Focus' பண்ணும்! ரசிகர்கள் சோகம்

திருப்பூரில் சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்.. செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய இளைஞர்.. பரபரப்பு தகவல்..!

இந்த முறை அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 10 அணிகள் இந்த முறை, ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.

புதிய இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில், மற்ற 8 அணிகளும், 2 முதல் 4 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தீவிர ஆலோசனை

ஏலத்திற்காக, 590 வீரர்கள் பட்டியல், ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இதிலுள்ள சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து, திறமையான அணியை உருவாக்க, அனைத்து ஐபிஎல் அணியினரும், கடந்த சில தினங்களாகவே திட்டம் போட்டு, தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

ஏலத்தில் தேர்வு செய்யும் வீரர்களை வைத்து தான், அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியின் பலம் இருக்கும் என்பதால், எந்தெந்த வீரர்களுக்காக ஏலத்தில் போட்டியிட வேண்டும் என்பது பற்றியும், தற்போதே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ப்ரீத்தி ஜிந்தா

இந்நிலையில், பிரபல அணியின் உரிமையாளர் ஒருவர், நாளை தொடங்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

punjab kings owner Preity Zinta to miss ipl auction 2022

இரண்டு நாட்கள் நடந்த பிளான்

'இந்த முறை, நான் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள மாட்டேன். எனது குழந்தைகளை விட்டு விட்டு, இந்தியாவிற்கு பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த இரண்டு நாட்கள், ஏலம் மற்றும் வீரர்கள் குறித்து, எனது அணியினடம், மிகவும் தீவிரமாக, அதிக ஆலோசனைகள் நடத்தினேன். எங்களின் ரசிகர்கள் கூட, வீரர்கள் தேர்வு பற்றி ஆலோசனை வழங்கலாம்.

அல்லது எங்களின் புதிய அணிக்காக பரிந்துரைகளையும் செய்யலாம். சிவப்பு நிற ஜெர்சியில் நீங்கள் யாரை பார்க்க நினைக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன். நீங்கள் வீரர்களை பரிந்துரை செய்யுங்கள். நான் செவி சாய்த்து கேட்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வருத்தம்

ஐபிஎல் ஏலத்தில், மிகவும் ஆக்டிவாகவும், அதே வேளையில், அதிக உற்சாகத்துடனும் காணப்படுபவர் ப்ரீத்தி ஜிந்தா. அதே போல, பஞ்சாப் அணியின் போட்டியின் போதும், மைதானத்திற்கு வந்து, வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். எப்போதும் தன்னுடைய அணியை ஊக்குவித்து கொண்டே இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, இந்த முறை ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால், பஞ்சாப் ரசிகர்கள், வருத்தத்தில் உள்ளனர்.

அதே போல, ஏலம் நடக்கும் போது, துரு துருவென இருக்கும் ப்ரீத்தி ஜிந்தாவைத் தான் கேமராவும் அதிக முறை Focus செய்யும். ஆனால், இந்த முறை அவர் பங்கேற்காததால், ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

punjab kings owner Preity Zinta to miss ipl auction 2022

அடுத்தவர் மனைவியை திருமணம் செய்த புகார்.. சிக்கலில் பிரபல கிரிக்கெட் வீரர்!

PUNJAB KINGS, PREITY ZINTA, MISS IPL AUCTION 2022, ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல்

மற்ற செய்திகள்