நீண்டகால ‘காதலியை’ கரம்பிடித்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. வைரலாகும் போட்டோ.. குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரான் தனது நீண்டகால காதலியை கரம்பிடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான நிக்கோலஸ் பூரான் (Nicholas Pooran), கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற முதல்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவர், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனை அடுத்து 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் பூரானை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அதே ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் பூரான் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் சில்ஹெட் சிக்ஸர்கள் (Sylhet Sixers) அணியின் சார்பாக விளையாடிய பூரான், அந்த அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
இதனை அடுத்து 2019-ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி பூரானை ஏலத்தில் எடுத்தது. கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிர அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், 14 போட்டிகளில் விளையாடி 353 ரன்களை பூரான் அடித்தார். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் அவருக்கு சோதனையான ஒன்றாக அமைந்தது. மொத்தம் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனிடையே கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘ஐபிஎல் பாதியிலியே நிறுத்தப்பட்டது பின்னால் இருக்கும் காரணம் மனதை நொறுக்குவதாக உள்ளது. ஆனால் இது அவசியமானது. விரைவில் ஐபிஎல் போட்டியில் சந்திப்போம். இந்த போட்டோ எனக்கு உத்வேகம் கொடுக்க உதவும்’ என தான் 4 முறை டக் அவுட்டாகி வெளியேறியது குறித்த போட்டோவை பதிவிட்டிருந்தார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தனது நீண்டகால காதலியான அலிஸா மிகுவல் (Alyssa Miguel) என்பவரை நிக்கோலஸ் பூரான் இன்று திருமணம் செய்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த போட்டோவை பூரான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது தனது திருமண புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பூரான் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நிக்கோலஸ் பூரானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Jesus has blessed me with many things in this life. None greater than having you in my life.
Welcoming Mr. and Mrs. Pooran ❤️ pic.twitter.com/dDzSX8zdSA
— NickyP (@nicholas_47) June 1, 2021
மற்ற செய்திகள்