இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா.. உச்சகட்ட விரக்தியில் ரசிகர்கள்.. இந்திய அணிக்கு வந்த சோதனை
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் தனது மூன்றாவது டெஸ்டை கேப்டவுன் நகரில் விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பங்கேற்று வருகிறது. முதல் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது, இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தற்போது தென்ஆப்பிரிக்கா உடன் ஒன்றுக்கு ஒன்று என்ற புள்ளி கணக்கில் தொடரில் சமநிலை வைக்கிறது.
இந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி என்ற பெருமையும், இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக வென்ற பெருமையும் கிடைக்கும். இதன்மூலம் இந்த டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்ரிக்கா 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிவருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 154 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது. வழக்கம் போல் பேட்டிங்கில் சொதப்பிய ரகானே புஜாராவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
புஜாரா சதம் அடித்து மூன்று வருடங்கள் ஆகின்றன, ரகானே சிறப்பாக ஆடி 2 வருடங்கள் ஆகின்றன. கடைசியாக மெல்போர்ன் சதம் தான் ரகானேவின் மெச்சும் படியான ஆட்டம். துணைக்கேப்டன் பதவியை பறித்த பின்னும் ரகானேவின் ஆட்டம் மோசமாகவே இருக்கிறது. அஸ்வினின் சராசரியை விட கடந்த ஆண்டுகளில் ரகானே, புஜாராவின் சராசரி கீழே உள்ளது. முன்னதாக, கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரஹானே மற்றும் புஜாரா அரைசதம் அடித்த பின், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஹனுமா விஹாரி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வாய்ப்புகளுக்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். புஜாரா, ரகானே பார்முக்கு திரும்புவர் என்ற நம்பிக்கையுடன். ஆனால் தொடர்ந்து பார்முக்கு வராமல் இருவரும் சொதப்பி வருவது இந்திய ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. இருவருக்கும் பதிலாக, விஹாரி, ஷ்ரேயாஸ், கில் போன்றோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
No one in the dugout got up and thanked Cheteshwar Pujara & Ajinkya Rahane when they came back to the dressing room. This was their farewell Test. Utter disrespect for Purane who did so much for Indian Cricket
Shameful scenes#SAvIND#AjinkyaRahane#CheteshwarPujara#PURANE pic.twitter.com/dMbuuFJUiC
— Shoronjeet Banerjee (@shoronjeet02) January 13, 2022
மற்ற செய்திகள்