"இவருக்கு அதிர்ஷ்டமே இல்ல போல..." 'கோபத்தில்' பேட்டை தூக்கி அடித்த 'இந்திய' வீரர்... "எங்களுக்கும் 'கஷ்டம்' ஆயிடுச்சுபா..." வருத்தத்தில் 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 321 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்னும் இரண்டு நாளில் என்ன நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, இந்திய அணி சில தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கைகோர்த்து இந்திய அணியை ஓரளவு மீட்டெடுத்தனர். இதில், புஜாரா 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால், இவர் அவுட்டான விதம் தான், தற்போது பேசு பொருளாகியுள்ளது.
மிகவும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த புஜாரா, டாம் பெஸ் வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். ஆனால், ஸார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் நின்ற வீரரின் ஹெல்மெட்டில் பட்ட பந்து, வேகமாக பறந்தது. இந்த பந்தை மிட் ஆன் திசையில் நின்ற வீரர் கேட்ச் பிடித்தார். அவர் அடித்த ஷார்ட் எங்கேயோ செல்ல, ஹெல்மெட்டில் பட்டு வேறு திசை சென்று அவுட்டானதால் புஜாரா கடுப்பானார்.
Pujara was very unlucky. He got out like this after playing so well. 😭😭😞
Yes, we all want #JusticeForPujara . #INDvENG pic.twitter.com/3UyjOfdrMm
— Ritesh Mahato (@Ritesh_7l) February 7, 2021
பொதுவாக, களத்தில் அதிகம் கோபத்தை வெளிப்படுத்தாத புஜாரா, இன்று தான் அவுட்டான விதத்தால் கோபத்தில் பேட்டை எடுத்து தரையில் அடித்தார். இப்படி அதிர்ஷ்டமே இல்லாமல் அவர் அவுட்டானதால், ஏமாற்றத்தில் புஜாரா கோபப்பட்டது தொடர்பான வீடியோ, தற்போது ரசிகர்களிடையேயும் அதிக வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்